மோடி அரசின் விளம்பர செலவு ரூ4,300 கோடி : RTI

0
221

மத்தியில் பாஜக அரசு பதவியேற்றது முதல் விளம்பரங்களுக்காக ரூ.4,300 கோடி செலவு செய்துள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்று 4 ஆண்டுகளில் விளம்பரத்துக்காக எத்தனை கோடி பணம் செலவு செய்துள்ளது என்பதை அறிய மும்பையைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் அனில் கல்காலி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுத்தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவுக்கு மத்திய நிதித்துறை ஆலோசகர் தபான் சுத்ராதர் விளக்கம் அளித்துள்ளார்

இதுதொடர்பாக ஆர்டிஐ அளித்த பதிலில் 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை ரூ.4,300 கோடி செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை மத்திய அரசு அச்சு ஊடக விளம்பரத்துக்காக ரூ.424.85 கோடியும், தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்ட டிஜிட்டல் விளம்பரங்களுக்காக ரூ.448.97 கோடியும்,
விளம்பரப் பலகைகள், பதாகைகள் உள்ளிட்ட வெளிப்புற விளம்பரத்துக்காக ரூ.953.54 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அச்சு ஊடக விளம்பரங்களுக்காக ரூ.510.69 கோடி, டிஜிட்டல் ஊடக விளம்பரங்களுக்காக ரூ.541.99 கோடி மற்றும் வெளிப்புற விளம்பரங்களுக்காக ரூ.118.43
என மொத்தம் ரூ.1,171.11 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது

2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரைஅச்சு ஊடக விளம்பரங்களுக்கு ரூ.463.38 கோடியும், டிஜிட்டல் ஊடக விளம்பரங்களுக்காக ரூ.613.78 கோடியும், வெளிப்புற விளம்பரங்களுக்கு ரூ.185.99 கோடியும் என மொத்தம் ரூ.1,263.15 கோடியும் செலவிட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை டிஜிட்டல் ஊடக விளம்பரங்களுக்கு ரூ.475.13 கோடியும், வெளிப்புற விளம்பரங்களுக்கு ரூ.147.10 கோடியும் செலவிடப்பட்டது.2017 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் அச்சு ஊடக விளம்பரத்துக்கு ரூ.333.23 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.955.46கோடி செலவு செய்துள்ளது.

மோடி தலைமையிலான அரசு மக்களின் வரிப்பணத்தை விளம்பரத்துக்காக அதிகமாக செலவு செய்வது சமூக ஊடகங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தின, எதிர்க்கட்சிகள் கண்டித்தன. இதனால் 4 வது ஆண்டில் ரூ.307.69 கோடி குறைந்துள்ளது.

இதையும் படியுங்கள்: சுரங்க முறைகேடு வழக்கில் ஜனார்த்தன ரெட்டிக்கு சாதகமாக தீர்ப்பு வர நீதிபதிக்கு 100 கோடி லஞ்சம் ; காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்