மோடி அரசின் தேர்தல் சலுகைகள் முடிவுக்கு வர உள்ளதால் மக்கள் தங்களது வாகனங்களில் பெட்ரோலை நிரப்பி வைத்துக் கொள்ளுமாறு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. மணிப்பூரில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்👇இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி தன்னுடைய சுட்டுரைப் பதிவில், “மோடி அரசின் தேர்தல் சலுகைகள் முடிவடைய உள்ளதால் மக்கள் தங்களது வாகனங்களில் பெட்ரோலை நிரப்பிக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தில் மட்டும் மத்திய பாஜக அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வை மேற்கொள்வதில்லை என ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. தேர்தலுக்கு பின் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை அமல்படுத்தும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வரும் நிலையில் ராகுல்காந்தி இத்தகைய கருத்தை பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here