மோடி அரசின் சாதனை;சரிந்த வாகன விற்பனை; மூடப்பட்ட 286 டீலர் ஷோரூம்கள்; 32000 பேர் வேலையிழப்பு

0
883

 18 மாதங்களில் இந்தியா முழுவதும் உள்ள 286 டீலர்கள்  தங்கள் ஷோரூம்களை  மூடியுள்ளனர். இதனால்  32 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர். நான்கு சக்கர வாகனப் பிரிவின் நகர்ப்புற, பகுதி நகர்ப்புற சந்தைகளில் இருக்கும் ஷோரூம்கள் மூடப்பட்டிருக்கிறது .  

ஏப்ரல் 2019 வரையில்   கடந்த 18 மாதங்களில்  கார் விற்பனைப் மிகவும் சரிந்துள்ளதாக கூறுகிறது . மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 84 டீலர் ஷோரூம்கள்  மூடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில்  35 -ம் , டெல்லியில்  27-ம் , பீகாரில் 26-ம் , ராஜஸ்தானில்  21 ம்  மூடப்பட்டுள்ளன என்று ஆட்டோமொபைல் டீலர்களின்  அமைப்பான Federation of Automobile Dealers Associations (FADA) வெளியிட்ட தகவல் கூறுகிறது. 

இது குறித்து ஆட்டோமொபைல் டீலர்களின்  அமைப்பின் துணைத் தலைவர் விங்கேஷ் குலாட்டி கூறுகையில் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நகரங்களில் செயல்பாட்டுச் செலவுகள் குறைவு. மோசமான விற்பனை காரணமாக டீலர் ஷோரூம்கள் மூடப்பட்டது என்றார். 

கடந்த 5 ஆண்டுகளில் இந்தத் தொழிலை நடத்துவதற்கு 2 மடங்கு செலவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால்  மொத்த லாபம் 10-15% குறைந்தது.

அதுபோல, ஆட்டோமொபைல் சில்லறை விற்பனை தொடர்ந்து பத்து மாதங்களாக சரிவை சந்தித்து வந்தது.  புதிய வாகனங்கள் வாங்குவதற்காக  பதிவு செய்வது 5.4% குறைந்தது. இந்த ஆண்டு 16,46,776 யூனிட்டுகள்  மட்டுமே விற்பனையாகியுள்ளது . கடந்த ஆண்டு 17,81,431 யூனிட்டுகள் விற்பனையாகி இருந்தது . 

வணிகத்துக்காக பயன்படுத்தப்படும்  வாகனங்களின்  விற்பனை 19.3 % குறைந்துள்ளது. அதாவது 60378 யூனிட்டுகள் கடந்த ஆண்டு விற்ற நிலையில் இந்த ஆண்டு 48752 யூனிட்டுகள்தான் விற்பனையாகியுள்ளது. இருசக்கர வாகன விற்பனை 5% குறைந்துள்ளது. அதாவது 13,94,770 யூனிட்டுகள் கடந்த ஆண்டு விற்ற நிலையில் இந்த ஆண்டு 13,24,822  யூனிட்டுகள்தான் விற்பனையாகியுள்ளது.

பயணிகள் வாகன விற்பனை 4.6% குறைந்துள்ளது அதாவது 2,35,539 யூனிட்டுகள் கடந்த ஆண்டு விற்ற நிலையில் இந்த ஆண்டு 2,24,755 யூனிட்டுகள்தான் விற்பனையாகியுள்ளது.

 நிறுவனங்களின் உற்பத்தியை வாங்கிவிற்கும் பழைய டீலர்கள்  5-10% மட்டுமே மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்கிறது ஆட்டோமொபைல் டீலர்கள் அமைப்பு.

ஆட்டோமொபைல் டீலர்களின்  அமைப்பின் துணைத் தலைவர் விங்கேஷ் குலாட்டி அடுத்த 10 ஆண்டுகளில் வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். தற்போது இருக்கும் நிலைமை தற்காலிகமானதுதான் என்கிறார்.  

கார் டீலர்கள் இனி ஷோரூம்களை மூடமாட்டார்கள் என்ற நிலைமை வரலாம் ஆனால் இருசக்கர வாகன டீலர்கள் விற்பனை சரிந்துள்ளதால்  அவர்களுக்கு கடினம்தான்.  ஆனால், வரவிருக்கும் பண்டிகை காலங்கள், இந்த நிலையை மாற்றும்  என்கிறார் விங்கேஷ்.

தாமதமான பருவமழை, இறுக்கமான பணப்புழக்கம்  காரணமாக வாகன விற்பனை சரிந்துள்ளதாக ஆட்டோமொபைல் டீலர்களின்  அமைப்பு கூறூகிறது .  ஜி.எஸ்.டி. யில் தற்காலிக அல்லது பகுதி வரி குறைப்பு, பணப்புழக்கம் அதிகமாவதால் வாகன விற்பனை  மீண்டு வரும் என்று    ஆட்டோமொபைல் டீலர்களின்  அமைப்பு நம்புகிறது . 

thewire.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here