பிரபல ஊடக நிறுவனமான தி குயின்ட் (The Quint )- நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளர் ராகவ் பாலின், நொய்டா வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

வரி ஏய்ப்புத் தொடர்பாக ராகவ் பால் மீது புகார் வந்ததை அடுத்து, டெல்லியை அடுத்துள்ள நொய்டாவில் இருக்கும் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருவதாக வருமான வரித்துறை தெரிவிக்கிறது.

தி குயின்ட் இணையத்தள அலுவலகத்தில், வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொள்வதை ஊடகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று பல்வேறு பத்திரிகையாளர்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இவ்வாறு நடத்தப்படும் சோதனைகளுக்கு அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும் பத்திரிகைச் சுதந்திரம் மீது நடத்தப்படும் தாக்குதல் என்றும் இந்தியா முழுவதுமிருக்கும் பல்வேறு பத்திரிகையாளர்கள் கணடனம் தெரிவித்துள்ளனர்.

பிரபல பத்திரிகையாளர் சேகர் குப்தா தி குயின்ட் அலுவலகம், மற்றும் அதன் உரிமையாளர் ராகவ் பாலின் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருவது தீவிர கவலையை ஏற்படுத்துகிறது. வருமான வரித்துறையினருக்கு கேள்வி கேட்க அனைத்து உரிமையும் இருக்கிறது. ஆனால் அச்சோதனைகள் மிரட்டல் போல தோன்றுகிறது. நியாயம் இருந்தால், அரசு விரைவாக விளக்க வேண்டும். அல்லது இந்த வருமான வரிச் சோதனை விமர்சனம் செய்யும் ஊடகங்களை குறிவைப்பதாக எடுத்துக் கொள்ளப்படும் என்று பதிவிட்டுள்ளார்.

மூத்த பத்திரிகையாளர் அஷுதோஷ் மற்றும் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் , மோடி அரசாங்கத்தை விமர்சித்ததற்காக ராகவ் பால் குறி வைக்கப்பட்டுள்ளார் என்று கூறுகின்றனர்.

இது குறித்து பதிவிட்டிருக்கும் மூத்த மூத்த பதிரிகையாளர் அஷுதோஷ் பத்திரிகையாளர் பிரனாய் ராய்க்கு பிறகு , ராகவ் பால் குறி வைக்கப்பட்டுள்ளார். மிகவும் நம்பகமான ஊடகவியலாளர்களில் ராகவ் பாலும் ஒருவர் .இப்போது மோடியின் ஆட்சியை எதிர்த்ததற்கான விலையைக் கொடுக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.

இது குறித்து பதிவிட்டிருக்கும் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் தி குயின்ட் அலவலகமும், அதன் நிறுவனர் ராகவ் பாலின் வீட்டிலும் சோதனை நடத்தப்படுவது மோடி அரசுக்கு அவர் எதிரான நிலைப்பாட்டை எடுத்ததால்தான் என்றும் இவ்வாறு செய்வது ஊடகங்களை மிரட்டவே இவ்வாறு சோதனை மேற்கொள்கிறார்கள் என்றும் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துரை ஆகியவற்ரை இந்த தவறாக பயன்படுத்துகிறது என்றும் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்பு தி குயின்ட் இணையதளத்தில் சன்சாட் ஆதர்ஷ் கிராம் யோஜனா Sansad Adarsh Gram Yojana’ (SAGY) என்றத் திட்டத்தின்கீழ் பாஜக எம்பிக்கள் தத்து எடுத்துக் கொண்ட தொகுதிக்கு அவர்கள் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்று எம்பி ரிபோர்ட் கார்டு என்ற தலைப்பில் செய்திகளை பிரசுரித்து வந்தார்கள். பாஜகவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், சட்ட அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் போன்றோர்களின் ரிப்போர்ட் கார்டுகளும் அடக்கம். மேலும் இவர்கள் தொகுதிகளுக்கு எதுவும் செய்யவில்லை என்றே அச்செய்திகள் இருந்தது . ரஃபேல் ஒப்பந்தத்தில் நடந்த ஊழல் முறை கேடுகளை குறித்து விரிவான செய்திகளையும் தி குயின்ட் வெளியிட்டு வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here