மோடி, அமித் ஷாவின் தேர்தல் பேச்சுகளை தொடர்ந்து எதிர்க்கும் தேர்தல் ஆணையர் இவர்தான்

0
384

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷாவின் சர்ச்சைக்குரிய தேர்தல் பேச்சுக்களுக்கு 5 முறை தேர்தல் ஆணையர் அசோக் லவசா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ளன. இந்த நன்னடத்தை விதிகளை மீறும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் உண்டு.  மாயாவதி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிடோருக்கு தேர்தல் பிரசாரம் செய்ய இடைக்கால தடைகள் விதிக்கப்பட்டன.

பிரதமர் மோடி பாலக்கோடு தாக்குதல், அபிநந்தன் குறித்து பேசியது, இஸ்லாமியர்கள் குறித்து பேசியது, மைனாரிட்டி என்று தாக்கி பேசியது ஆகியவை குறித்து புகார்கள் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட 6 புகார்களிலும் மோடி மீது எந்த தவறும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது . 

மொத்தம் மூன்று பேர் இந்த புகாரை விசாரித்தனர். தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா மற்றும் சுஷில் சந்திரா ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். இதில் இரண்டு அதிகாரிகள் மோடி மீது தவறு இல்லை என்று முடிவெடுத்தார்கள். ஆனால் அசோக் லவசா மோடிக்கு எதிராக வாக்களித்துள்ளார்.

இவர் 6 வழக்குகளில் 4 வழக்கில் மோடிக்கு எதிராக லவசா வாக்களித்தார். 6 வழக்குகளிலும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் அதிகாரி சுஷில் சந்திரா மோடிக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதேபோல் அமித் ஷாவிற்கு எதிரான அனைத்து வழக்கிலும் அசோக் லவசா அவருக்கு எதிராக வாக்களித்தார்.அமித் ஷா மற்றும் மோடி இப்படி பேசியது மிக மிக தவறு என்று அசோக் லவசா கூறி இருக்கிறார். ஆனாலும் மெஜாரிட்டியாக இரண்டு அதிகாரிகள் மோடிக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்ததால் விதிமுறைகளை மீறவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here