மோடி, அமித் ஷாவின் தேர்தல் பேச்சுகளை எதிர்த்த தேர்தல் ஆணையரின் மகன் மீது அமலாக்கத்துறையை ஏவிய மோடி அரசு

0
284

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் விதிகளை மீறியதாக தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவின் மகன் அபிர் லவாசா இயக்குநராக இருப்பதாகக் கூறப்படும் நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. 

தேர்தல் ஆணையர் அசோக் லவசா  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷாவின் சர்ச்சைக்குரிய தேர்தல் பிரச்சார பேச்சுக்களுக்கு 5 முறை எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதற்கு பழிவாங்கும் விதமாக  அசோக் லாவாசா  குடும்பத்தினர் மீது பாஜக அரசு அமலாக்கத்துறையையும், வருமான வரித்துறையையும் ஏவிவருகிறது..  இதற்கு முன்பு அசோக் லாவாசாவின் மனைவி நவல் சிங்கால் லவாசா  வரிஏய்ப்பில் ஈடுபட்டதாக  வருமான வரித்துறையினர் அவர் மீது குற்றச்சாட்டு வைத்தனர். இதனைத் தொடர்ந்து  அவரிடம்  வருமான வரித்துறையினர் அண்மையில் விசாரணை மேற்கொண்டனர். 

தற்போது அசோக் லாவாசாவின் மகனிடம்  அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர் 

‘நௌரிஷ் ஆர்கானிக் ஃபுட்ஸ்’ என்ற நிறுவனம், நடப்பாண்டு தொடக்கத்தில் மோரீஷியஸைச் சேர்ந்த நிறுவனத்திடமிருந்து ரூ.7.25 கோடி மதிப்பிலான நிதியைப் பெற்றது. அந்த நிதியைப் பெற்றதில் முறைகேடு நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்த நிறுவனத்தின் இயக்குநராக அபிர் லவாசா பணியாற்றியதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (எஃப்இஎம்ஏ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பணப் பரிவர்த்தனை தொடர்பாக அபிர் லவாசாவிடம் அண்மையில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு அவர் தகுந்த ஒத்துழைப்பு வழங்கினார். இந்த விவகாரத்தில் மேலும் சிலர் விசாரிக்கப்படலாம் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here