2019 ஆம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் உள்ள 42 இடங்களையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றும். பாஜகவை மத்தியில் பதவியில் இருந்து வெளியேற்றி இந்த நாட்டைப் பாதுகாப்போம் என்ற பிரச்சாரத்தை நாம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி துவக்க வேண்டும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வருடந்தோறும் ஜூலை 21 ஆம் தேதி நடத்தப்படும் தியாகிகள் தினம் பேரணியில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

30

2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் வெற்றிபெறும். இது செய்வதற்கு நாம் உறுதி எடுக்க வேண்டும். வருகிற ஆகஸ்ட் மாதத்தில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் சபதம் ஏற்க வேண்டும்.

ஆகஸ்ட் 15-ஆம் தேதி நமது தேசியக்கொடியை அனைத்து தொண்டர்களும் கையில் ஏந்தி, சபதம் எடுத்து, அடுத்த 2019-ஆம் ஆண்டில் டெல்லி செங்கோட்டையில் பாஜகவினர் யாரும் தேசியக் கொடியை ஏற்றவிடக்கூடாது என்று சபதம் ஏற்க வேண்டும்.

2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொல்கத்தாவில் மிகப்பெரிய பேரணியை நடத்துவோம். எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் அழைத்து அந்தப் பேரணியை மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்துவோம்.

25

மத்தியில் ஆட்சியைப் பிடிப்பது நமது நோக்கமில்லை, இலக்கும் இல்லை. மத்தியில் ஆளும் பாஜகவை வெளியேற்ற வேண்டும். அவர்களிடம் இருந்து இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.

நாட்டின் பல இடங்களில் பலர் அநியாயமாக கொலை செய்யப்படுகிறார்கள், பா.ஜ.க மக்களிடையே பயங்கரவாதத்தை தூண்டிவிடுகிறது.

பாஜக என்ன விதமான இந்துத்வாவை மக்களிடம் எடுத்து கூறுகிறது? தாலிபானியத்தை உள்ளடக்கிய இந்துத்வா? சுவாமி ராம கிருஷ்ணா மற்றும் சுவாமி விவேகானந்தாவின் இந்துத்துவம் உங்களிடம் இல்லை. பாஜகவின் இந்துத்துவத்தை நாங்கள் ஆதரிக்கமாட்டோம். இந்து என்றால் தியாகம் என்பது பொருள்.

பாஜகவின் இந்துத்துவம் வாளாலும், துப்பாக்கியாலும் ஆனது. இது இந்துக்களையும் , இந்துத்துவத்தையும் அவமதிப்பது ஆகும். ஹிட்லர், முசோலினியை விட கொடூரமான ஆட்சியாளர்களை நாம் பார்க்கிறோம் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
பாஜகவிலும், ஆர் எஸ் எஸ்ஸிலும் பல நல்லவர்கள் இருக்கிறார்கள், அதிலிருக்கும் சிலர் மோசமான விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர்.

26

மம்தா பானர்ஜி ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், தலித் மற்றும் சிறுபான்மையினரின் பிரச்சனைகளை தீர்த்துவைக்குமாறு தனது கட்சி எம் எல் ஏக்களிடம், கட்சி தொண்டர்களிடமும் கேட்டு கொண்டார்.

மிட்நாபூரில் பாஜகவினர் மிகப்பெரிய அளவில் கூட்டம் நடத்தினார்கள். அந்தக் கூட்டத்தில் போடப்பட்டு இருந்த மேடை திடீரென சரிந்து விழுந்தது. ஒரு பந்தலைக் கூட ஸ்திரமாக அமைக்க முடியாத பாஜகவினர் எப்படி நாட்டைக் கட்டமைக்கப்போகிறார்கள்.

பாஜகவுக்கு நாடு முழுவதும் எழுந்துவரும் அதிருப்தியால், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், பிஹார், ஒடிசா, மேற்கு வங்கம், தமிழகத்தில் மக்களவைக்கான இடங்கள் குறைந்து வருகின்றன.

21july Express photo Shashi Ghosh

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது, பாஜகவுக்கு இந்த முறை 325 வாக்குகள் இருந்தன. உறுப்பினர்கள் ஆதரவு இருந்தது. ஆனால், அடுத்த தேர்தலில் பாஜகவுக்கு 100 இடங்கள் வரை குறையக்கூடும்.

இந்த பேரணியின் போது, பாஜகவின் முன்னாள் எம்.பி. சந்த மித்ரா, கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி மொய்னுல் ஹசன், காங்கிரஸை சேர்ந்த சபினா யாஸ்மின் மற்றும் மிசோரம் மாநில அரசு தலைமை வக்கீல் பிஸ்வஜித் தேப் ஆகியோர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்