பாஜகவில் எம்பியாக இருந்து கொண்டே, மோடி அரசையும், பிரதமர் மோடியையும் விமர்சித்து வந்த நடிகர் சத்ருஹன் சின்ஹாவுக்கு பாட்னாசாஹிப் தொகுதியில் இடம் அளிக்கப்படவில்லை.

அந்த தொகுதியில் சத்ருஹன் சின்ஹாவுக்கு பதிலாக, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் போட்டியிடுகிறார்.

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலில் பீகாரில் உள்ள 40 தொகுதிகளுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்கள் இன்று
(சனிக்கிழமை) அறிவித்தனர்.

மக்களவைத் தேர்தலில் பாஜகவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் தலா 17 இடங்களிலும், ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சி 6 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இந்த மூன்று கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகளும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டன.

இந்நிலையில். பாஜக மாநிலத் தலைவர் பூபேந்திர யாதவ், ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் முன்னிலையில் பாஜக தங்கள் வேட்பாளர்கள் பெயரை அறிவித்தது.

பாட்னாசாஹிப் தொகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு போட்டியிட்டு வென்ற நடிகர் சத்ருஹன் சின்ஹாவுக்கு இந்த முறை வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக அந்த தொகுதியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் போட்டியிடுகிறார்.

கடந்த 2016-ஆம் ஆண்டில் பணமதிப்பு நீக்கத்தை மோடி அரசு கொண்டுவந்தத்தில் இருந்து சத்ருஹன் சின்ஹா மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இதனால் பாஜகவில் எம்.பி. பதவி வகித்துக் கொண்டே, பாஜக அரசையும், பிரதமர் மோடி, உயர்மட்ட தலைவர்களை சத்ருஹன் சின்ஹா விமர்சித்து வந்தது கட்சியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், எதிர்க்கட்சிகள் நடத்திய மகாகட்பந்தன் பேரணியில் சத்ருஹன் சின்ஹா பங்கேற்றது பாஜகவில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் இந்த முறை சத்ருஹன் சின்ஹாவுக்கு சீட் வழங்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here