மோடியும், அமித் ஷாவும் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

0
275

விவசாயிகள் போராட்டத்தின்போது உயிரிழந்தோர் குறித்து பிரதமர் மோடியிடம் பேசியபோது அவர் ஆணவத்துடன் பதிலளித்ததாக மேகாலயா மாநில ஆளுநர் கூறியிருந்தார். ஆளுநர் கூறியது உண்மை என்றால், பிரதமரும் , உள்துறை அமைச்சர் அமித் ஷாவும்  விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

 ஹரியானாவில்  நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசியுள்ள சத்ய பால் மாலிக், “நான் அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்து, விவசாயிகளின் பிரச்சினை குறித்து பேசியபோது, விவசாயிகள் போராட்டத்தில் ஐந்நூறு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர் என்று அவரிடம் கூறினேன். அதற்கு அவர் திமிருடன் அவர்கள் எல்லோரும் எனக்காகவா இறந்தார்கள்?’ என கேட்டார்” என்று தெரிவித்திருந்தார்.

“நான் அவரிடம், ‘ஆமாம், நீங்கள் நாட்டின் தலைவராக  இருப்பதால்தான் அவர்கள் இறந்து போனார்கள்’ என கூறினேன்” என்று சத்ய பால் மாலிக் குறிப்பிட்டுள்ளார்.

தன் பேச்சிற்காக தான் பணியிட மாற்றம் செய்யப்படலாம் என்றாலும், நான் இதற்கு அஞ்ச மாட்டேன் என்று அவர் பின்னர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : 👇

இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், “பிரதமர் நாட்டிற்கு உண்மையைச் சொல்ல வேண்டும் அல்லது ஆளுநர் பொய் சொல்கிறார் என்றால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பாஜகவால் நியமிக்கப்பட்ட ஆளுநர் சத்ய பால் மாலிக் மற்றும் பிரதமருக்கு இடையேயான உரையாடல் ஒட்டுமொத்த நாட்டையுமே அதிர்ச்சியடைய வைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

“பிரதமர் மோடி, அவரது அரசு மற்றும் பாஜகவின் விவசாயிகளுக்கு எதிரான முகம் அம்பலமாகியுள்ளது. ஆளுநர் பொய் சொல்கிறார் என்றால், அவரை பதவி நீக்கம் செய்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஆனால், அவர் பேசியது உண்மைதான் என்றால், பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், உழைக்கும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள் : 👇

விவசாயிகளின் போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு எப்போது இழப்பீடு வழங்கப்படும் என்பதையும் அவர்களிடம் தெரிவிக்க வேண்டும். மிஸ்டர். பிரதமர், விவசாயிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மிக உயர்ந்த இந்திய அரசின் பதவியில் இருப்பவரின் மொழியா நீங்கள் பேசியது?” என்று ரந்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here