பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு விவகாரத்தில் ஐந்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அமித்ஷா விளக்கமளித்துள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பிராடி ஹவுஸ் கிளையில் 11,400 கோடி ரூபாய் வரை முறைகேடாக பரிவர்த்தனை நடைபெற்றதாக, அந்த வங்கியின் நிர்வாகம் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு தகவல் தெரிவித்தது.

இந்த புகாரின் அடிப்படையில் வைர வியாபாரியான நீரவ் மோடி, மீது அமலாக்கத்துறையினர் மற்றும் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத்தொந்து நீரவ் மோடிக்குச் சொந்தமான 45க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடியுடன் இந்திய அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் முதன்மைச் செயல் அதிகாரிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதில் நீரவ் மோடியும் உள்ளார். இதனையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

amitsha

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, ”நீங்கள் என்னுடன் அமர்ந்து இருக்கிறீர்கள். இதில் யாராவது ஒருவர் குற்றம் செய்துவிட்டு என்னுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டால், அவர் செய்த குற்றத்திற்காக என்னை எப்படி பொறுப்பேற்கச் சொல்ல முடியும்?” என்றார். மேலும் அவர், நீரவ் மோடி விவகாரத்தில், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஐந்தாயிரம் கோடி ரூபாய் வரையிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here