மோடியின் 4 ஆண்டு ஆட்சி பற்றி ராகுல் காந்தியின் ரிப்போர்ட் கார்டு

0
179

பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில்,அவரின் ஆட்சி குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரிப்போர்ட் கார்டு ஒன்றை டிவிட்டரில் வெளியிட்டு விமர்சித்துள்ளார்.

மோடியின் ஆட்சியில் முக்கிய 4 துறைகளான வேளாண்மை, வெளியுறவுத்துறை, பெட்ரோல் டீசல் விலை, வேலைவாய்ப்பு, ஆகியவற்றில் மோடி தோல்வி அடைந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். தோல்வியின் அடையாளமாக (F) – Fail கிரேட் அளித்துள்ளார்.

ஆட்சியை விளம்பரப்படுத்தி ஸ்லோகன் உருவாக்குவதால் மற்றும் சுய விளம்பரங்களில் மோடி அரசுக்கு ராகுல் காந்தி ஏ+ (APlus) கிரேட் கொடுத்துள்ளார். யோகாவுக்கு பி- கிரேட் (B) கொடுத்துள்ளார்.

மேலும் மோடி பேச்சில் வல்லுநர், முக்கிய விசயங்களை கையாள்வதில் சிரமபடுபவர், எதிலும் சரியாக கவனம் செலுத்தாததவர் என்றும் தனது டிவீட்டில் பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்