மோடியின் பேட்டி முன்னதாகவே தயாரிக்கப்பட்ட ஸ்கிரிப்ட் ;ஆதாரம் வெளியானது ; கேமரா செய்த துரோகம்

0
554

பிரதமர் மோடி, தனியார் தொலைக்காட்சி நியுஸ் நேஷனுக்கு அளித்த பேட்டி ஏற்கனவே பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது . பிரதமர் ஆன பிறகு மோடி எந்த ஒரு செய்தியாளர்கள் சந்திப்பையும் நடத்தியதில்லை என்று அவர்மீது குற்றச்சாட்டு இருந்தது. அதனை நிவர்த்தி செய்ய்யும் வகையில்  அல்லது நான் மீடியா கேட்கும் கேள்விகளுக்கு அஞ்ச மாட்டேன் என்றும் கூறும் வகையில் மோடி தனது 5 ஆண்டு கால ஆட்சி முடிவடையும் நிலையில் பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.    

மோடி ஊடகங்களுக்கு அளிக்கும் பேட்டிகளில் கேள்வியும், பதிலும் முன்னமே தயாரிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்தப் பேட்டிகளில் ஒரு செயற்கைத் த்ன்மை ஒட்டி கொண்டிருக்கும் . இந்த முறை மோடி நியுஸ் நேஷன் தொலைக்காட்சிக்கு கொடுத்தப் பேட்டியில் ஹீரோவுக்கு (மோடி) கேமரா துரோகம் செய்துவிட்டது. 

அந்த பேட்டி மோடியை மீண்டும் ஒரு சர்ச்சையில் தள்ளிவிட்டுள்ளது.  

அந்தப் பேட்டியில் மோடி , கவிஞராக – கடந்த 5 ஆண்டுகளில் ஏதாவது கவிதை எழுதியிருக்கிறீர்களா? என்று செய்தியாளர் கேட்ட போது ஹிமாச்சல் பிரதேசத்திலிருந்து வரும்போது காலையில் கூட ஒரு கவிதை எழுதினேன் என்று மோடி பதிலளிக்கிறார். பேசிக்கொண்டே மோடி கையில் வைத்திருக்கும் தாள்களில்  எதையோத் தேடுகிறார். அப்போது கேமரா,  தாள்களில்  இருக்கும் கவிதையை பெரிதாக காட்டுகிறது அப்போது கேமரா கவிதைகளுக்கு மேலே இருக்கும் ஒரு வரியை படம் பிடித்து விடுகிறது . 

27: At the end, I would like to ask Narendra Modi, the poet, whether he has written any poetry in the past five years? 

27. கடைசியில் மோடி கவிஞராக – கடந்த 5 ஆண்டுகளில் ஏதாவது கவிதை எழுதியிருக்கிறீர்களா?  என்ற கேள்வியை கடைசியில் நான் கேட்பேன் – என்பதையும் சேர்ந்து கேமரா படம்பிடித்து விடுகிறது . 

ANI, ABP News -க்கு மோடி கொடுத்த பேட்டிகள் கேள்வி பதில் முன்னமே எழுதபட்டது என்று தகவல்கள் வெளிவந்தாலும் யாரும்  குறுக்கு விசாரணையில் ஈடுபடவில்லை. இந்த முறை மோடி கொடுத்தப் பேட்டி – கேள்விகளும், அதற்கான  பதில்களும் முன்னமே எழுதப்பட்டது என்பதற்கு உறுதியான ஆதாரம் கிடைத்துவிட்டது .  நியுஸ் நேஷனுக்கு மோடி கொடுத்த பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகள் அவருக்கு முன்னமே கொடுக்கப்பட்டுள்ளது – எல்லா கேள்விகளும் முன்னமே கொடுக்கப்பட்டிருக்கலாம் எனென்றால் கேமராவில் படம் பிடித்த கேள்வி ’27’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது – முன்னமே கொடுக்கப்பட்டிருந்ததால்தான் அவர் டைப் செய்யப்பட்ட கவிதையை தயார் செய்து வந்திருந்தார். 

இதுகுறித்து பத்திரிகையாளர் பிரதிக் சின்ஹா, தனது டிவிட்டரில்   மோடியின் தொலைக்காட்சி பேட்டியில் , தேர்தல் பணிகளுக்கு மத்தியிலும் தான் கவிதை எழுதியதாக கூறுகிறார் அது தொடர்பாக தான் எழுதி வைத்த தாள்களை அவர் தேடுகிறார். அப்போது, கேமிரா அவர் கையில் வைத்திருக்கும் தாள்களை பெரிதாக காட்டுகிறது. அந்தத் தாள்களில் டைப் செய்யப்பட்ட கேள்விகளும் இருகிறது என்று பதிவிட்டுள்ளார். 

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் திவ்யா ஸ்பந்தனா கேள்வி பதில் முன்னமே கொடுக்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டி  மோடி ஏன் செய்தியாளர்களை சந்திக்கமாட்டார் மற்றும் ராகுல் காந்தியுடன் விவாதத்தில் ஈடுபடமாட்டார் ஏன் என்று  இப்போது தான் புரிகிறது என்று பதிவிட்டுள்ளார். 

 

நியுஸ் நெஷன் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில் ஏற்கனவே, பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் ஒரு டிவிக்கு அளித்த பேட்டியில், பாலகோட் விமானப்படை தாக்குதல் குறித்த ரகசியம் என்று மேகமூட்டத்தால் ரேடாரிடமிருந்து எஸ்கேப் ஆகலாம் அதனால்  மேகத்தை கவசமாக பயன்படுத்த நான் அறிவுரை வழங்கினேன் என்றுக்  கூறியிருந்தார். அவர் கூறிய கருத்து  சர்ச்சையானது . 

மேலும்  1980ல் தான் டிஜிட்டல் கேமிரா மற்றும் இ-மெயில் ஆகியவற்றை பயன்படுத்தியதாக கூறினார். அதுவும் சர்ச்சையானது . 

இதனையடுத்து ரேடார் அடிப்படையை தத்துவம் கூட தெரியாதவராக நமது பிரதமர் இருக்கிறார். ஒரு நாட்டின் பிரதமருக்கு இது கூட தெரியவில்லை என்றால் நாட்டின் பாதுகாப்பு எப்படி இருக்கும் என ஒரு சிலர் சீரியஸாகவும், அவரின் இந்த கருத்தை கலாய்த்தும் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இதேபோல், மோடியின் இ-மெயில், டிஜிட்டல் கேமிரா பேச்சையும் நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here