மோடியின் பெரிய வெற்றி இந்தியாவுக்கும், உலகுக்கும் கெட்ட செய்தி – கார்டியன் பத்திரிகையின் கட்டுரை இதுதான்

0
896

வரலாற்றிலேயே மிக பெரிய தேர்தலில் வெற்றி பெற்றவரின் பெயர் நரேந்திர மோடி. 1971 லிருந்து காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி 2 வது முறையாக ஆட்சி அமைக்கிறது. ஊழல் குற்றச்சாட்டுகள் கொண்ட காங்கிரஸ் கட்சியை வென்று  2014 ஆம் ஆண்டு பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது பாஜக .   

பிளவுபடுத்தும்  பொருளாதார நிலைமை இருந்த போதிலும் 2019 லும் மோடி தனது  பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் நிலைநாட்டியுள்ளார். இது இந்தியாவுக்கும், உலகுக்கும் கெட்ட செய்தி .

பாஜக இந்து தேசியவாதத்தை பரப்பும் அரசியல் கட்சி, இந்தியாவை மாற்றியமைக்க நினைக்கும் மோசமான இயக்கம். இந்து சமுதாயத்தின் உயர் ஜாதியினரின் சமூக ஆதிக்கம், பெரு நிறுவனங்களின் பொருளாதார வளர்ச்சி, கலாச்சார பழமைவாதம், பெண்கள் மீது  வெறுப்பு ஆகியவற்றை  பாஜக வெளிப்படையாகவே ஆதரிக்கிறது. மோடியின் அரசியல் வெற்றி இந்தியாவின் ஆன்மா ஒரு இருண்ட அரசியலிடம் இருப்பதாகவே தோன்றுகிறது. மோடியின் வெற்றியால் 19.5 கோடி முஸ்லிம்கள் இரண்டாம்தர குடிமக்களாகவே பார்க்கப்படுவார்கள்.   

தேர்தல் பிரச்சாரத்தின்போது முஸ்லிம்களை கரையான்கள் என்று மோடியின் வலதுகையாக இருக்கும்  அமித் ஷா கூறியிருந்தார்.  முஸ்லிம்கள் கும்பல்களால் கொலைசெய்யப்படுகிறர்கள், தாக்கப்படுகிறார்கள். முஸ்லிம்கள் மக்கள் தொகையில் அதிகமாக இருந்த போதிலும் அவர்கள் அரசியல் அனாதைகள். பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்களின் ஆதரவு கிடைக்காது என்று அஞ்சி அரசியல் கட்சிகளால் முஸ்லிம்கள் தவிர்க்கபடுகிறார்கள். மக்களவையில் 24 முஸ்லிம் எம்பிக்கள் இருக்கிறார்கள். இன்னும் இது குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது . [நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 27 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பாஜகவில் வெற்றி பெற்ற 303 எம்பிக்களில் ஒருவர்கூட முஸ்லிம் இல்லை] 

பிரிவினைவாத தலைவர் மோடி கவர்ந்திழுக்கும் பிரச்சாரம் மேற்கொள்வதில் கெட்டிக்காரர். மக்களுக்காக பேசுபவர் மாதிரி காட்டிக் கொள்பவர். பொய்யான கருத்துகள், பொய் செய்திகளை கூறி பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவர்.  

வலுவான தலைவர் யார் என்ற போது 55 சதவீதத்தினர் மோடியை தெரிவித்திருந்தனர். இந்த உலகத்துக்கு மற்றுமொரு தேசியவாத ஜனரஞ்சக தலைவர் தேவை இல்லை.  சுதந்திர இந்தியாவின் முக்கியமான விசயமான – ஜனநாயகமாக செயல்படும் பல கட்சிகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கினார் மோடி. மோடியின் அரசியலை விளக்கும் Majoritarian State  என்ற புத்தகத்தில்   

வேறு எந்தக் கட்சியும் பாஜகவுடன் போட்டியிட முடியாது , போட்டியிடும் கட்சிகளின் கருத்துகள் எதிரிகளின் கருத்துகளாகவே பார்க்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. பக்கத்து நாடான   பாகிஸ்தானுடன் காஷ்மீரை காரணமாக வைத்து  மோடி பொறுப்பற்ற முறையில் போருக்கு தயாரானார். அப்போது   முஸ்லிம் அடிப்படைவாதிகளுடன் கூட்டு வைத்திருக்கின்றன என்று எதிர்க்கட்சிகளை  கேவலமாக குற்றம் சுமத்தினார் . 

காங்கிரஸ் கட்சியை வழிநடத்தும் , நேரு காந்தி குடும்பம் மோடியை வெல்லும் வழிமுறைகளை யோசிக்க வேண்டும். பாஜகவுக்கு தேர்தல் நிதியாக  ரூ10.3 பில்லியன் வந்திருக்கிறது. கட்சிக்கு நிதி கொடுப்பதை தேர்தல் பத்திரங்கள் என்ற பெயரில் மோடி சட்டபூர்வமாக்கிவிட்டார். 

இந்தியாவை சிதைத்துவிடும் சமத்துவமின்மையை அகற்றுவோம் என்பதை  பாஜக  வெறும் பேச்சளவில் மட்டுமே வைத்திருக்கிறது .  இந்தியாவில்  ஜாதி மத பேதங்களை ஏற்படுத்தியே பாஜக அரசியல் செய்கிறது. பெரு நிறுவனங்களுக்கு சாதகமாகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் அரசியல் செய்கிறது பாஜக. எதிர்க்கட்சிகள் சமத்துவம் பற்றி ஒரு தனித்துவமான பிரச்சாரத்தை துவக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. 

காங்கிரஸ் ஏழைகளுக்கு குறைந்தபட்ச அடிப்படை வருமானம் என்ற திட்டத்தை உற்சாகம் ஆற்றல் இல்லாமல் விற்க முயன்றது.  அடையாளங்கள் (ஜாதி, மதம் ) குறித்த சண்டைகள் இல்லாமல் இருக்க வேண்டும் எல்லா இந்தியர்களுக்கும் எது பயன் தரும் என்பதில் அரசியல் போட்டி இருக்க வேண்டும்.  இந்தியாவில் இருக்கும் எதிர்க்கட்சிகள் ஏழைகளுடன் தொடர்பில் இருந்து நாட்டைக் காக்க வேண்டும் .

theguardian