மோடியின் புதிய இந்தியா ; ஜெய் ஶ்ரீராம் என சொல்ல மறுத்த மதாரசா ஆசிரியரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விட்ட கும்பல்

0
1268

Bengal madrasa teacher claims pushed off train for not saying Jai Shri Ram

Railway police officers said that they would take stern action against the miscreants once they are identified.

மேற்கு வங்கத்தில் ஜெய் ஶ்ரீராம் என சொல்ல மறுத்த மதாரசா ஆசிரியரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விட்டிருக்கிறது   இந்துத்துவா கும்பல் . 

 மேற்கு வங்கத்தில் ஓடும் ரயிலில் ஒரு கும்பல் ஜெய் ஶ்ரீராம் என முழக்கமிட்டு சென்றது. அதே பெட்டியில் பயணித்த மதராசா ஆசிரியர் ஹஃபீஸ் முகமது ஷாருக் ஹல்தாரிடம்   அதேபோல் முழக்கமிட வலியுறுத்தியிருக்கிறது அக்கும்பல். அந்த ஆசிரியர் இதை ஏற்க மறுத்ததால் கொடூரமாக தாக்கப்பட்டு  ஓடும் ரயிலில் இருந்து அவர் தள்ளி விடப்பட்டுள்ளார். அப்பகுதி பொதுமக்கள் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் . இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஹஃபீஸ் முகமது ஷாருக் ஹல்தார் கூறுகையில் கேன்னிங்கிலிருந்து ஹூக்ளியில் இருக்கும் மதரசாவுக்கு சென்றுக் கொண்டிருந்தேன். நான் தலையில் குல்லா அணிந்திருந்தால் ஏன் குல்லா அணிந்திருக்கிறாய் என்றனர். நான் பதில் பேசாததால் என்னை தாக்க ஆரம்பித்தனர் . ரயில் பார்க் சர்கஸ் நிலையத்தை அடையும் போது என்னை தள்ளிவிட்டனர்.  புகார் செய்ய காவல் நிலையத்துக்கு சென்ற போது அவர்கள் ரயில்வே போலீஸாரை அணுகுமாறு கேட்டனர். அதைத்தொடர்ந்து நான் ரயில்வே போலீஸாரிடம் புகாரை பதிவு செய்தேன் என்றார்.  

குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே போலீஸார் கூறியுள்ளனர். 

பிரதமர் மோடி 2-வது முறையாக பதவியேற்றதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஜெய் ஶ்ரீராம் முழக்கம் ஒரு வன்முறைக்கான ஆயுதமாகயுள்ளது . ஜெய் ஶ்ரீராம் என கூற  மறுத்தால் அவர்களை கொடூரமாக தாக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here