மோடியின் புதிய இந்தியா ; கால்நடைகளைத் திருடினார்கள் என்று கூறி ராமரின் பெயரால் தொடரும் ஜெய்ஶ்ரீராம் தாக்குதல்கள்

0
246

மீன்பிடிக்கச் சென்ற முஸ்லிம் இளைஞர்களை, கால்நடைகளை திருட வந்தவர்கள் எனக்கூறியும் , அவர்களை ஜெய்ஶ்ரீராம் என்று கூற வற்புறுத்தியும்  பாஜக குண்டர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் , வடக்கு தினஜ்பூர் அருகே, மீன்பிடிக்கச் சென்ற 5 முஸ்லிம் இளைஞர்களை, கால்நடைகளைத் திருட வந்தவர்கள் எனக்கூறி பாஜக குண்டர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான 5 முஸ்லிம் இளைஞர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். 

தாக்குதல் குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில், தாக்குதலுக்கு ஆளான ஐந்து இளைஞர்களும் புகார் அளித்துள்ளனர். முகமது முக்தார், தில்பர் உசைன், நவுசாத் அலி, எண்டாப் அலி, அனோர் ஆலம் ஆகியோர் செவ்வாய்கிழமை அருகில் உள்ள கிராமத்தில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.

தாக்குதலால் காயமடைந்த தில்பர் இந்தத் தாக்குதல் குறித்து கூறுகையில் , நாங்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, உள்ளூர் பஞ்சாயத்து உறுப்பினரின் கணவர் தலைமையில் சில பாஜக ஆதரவாளர்கள் அங்கே வந்தார்கள். அவர்கள் எங்களை அந்தக் கிராமத்தில் கால்நடைகளை திருட வந்தவர்கள் எனக்கூறினார்கள். நாங்கள் இல்லை என்று கூறிய போது, அடிக்கத் தொடங்கினர். ஜெய் ஸ்ரீ ராம் என்று கூற எங்களை வற்புறுத்தினார்கள். அதற்கு நாங்கள் மறுக்கவே மீண்டும் எங்களைத் தாக்கினாரகள்  என்றார். 

தாக்குதலில் காயமடைந்த மற்றுமொரு இளைஞர் முக்தர் இது குறித்து கூறுகையில் நாங்கள்  தாக்கப்படுவதை பார்த்த  அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களும், திரிணாமூல் கட்சியினரும் எங்களை  மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களைப் பார்த்ததும் தாக்கியவர்கள் ஓடிவிட்டனர். போகும்போது சட்டரீதியிலான நடவடிக்கை எடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தனர் என்றார் .

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து  பாஜக தலைவர்கள் அப்படி எதுவும் நிகழவில்லை என்று கூறியுள்ளனர். இந்த 5 பேரும் ஒருவொருகொருவர் சண்டையிட்டுக் கொண்டனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் எங்கள் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் என்று வடக்கு தினஜ்பூரின் பாஜக பொது செய்லாளர் பாசுடெப் சர்கார் கூறியுள்ளார்.  

தாக்குதலுக்கு ஆளான ஐவரும் இப்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மூவர் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் .  தில்பரும், முக்தரும் மாவட்ட தலைநகரில் உள்ள ராஜ்கஞ்ச் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் 50 சதவீதம் சிறுபான்மையினர் வாழும் கரண்டிகி,  சிங்கர்தாகா பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இதனால் போலீசாரின் கண்காணிப்பு இப்பகுதிகளில் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. 

மேலும் 5 பேரை தாக்கிய கும்பலை போலீஸார் தேடிவருகின்றனர். 

thetelegraph