மோடியின் புதிய இந்தியா; எங்கே போகிறோம்? ஜெய்ஶ்ரீராம் கூறும்படி சொல்லி இளைஞரை பலமணி நேரம் அடித்துக் கொலை செய்த கும்பல்

The victim has been identified as 24-year-old Tabrez Ansari. Several videos of the Jharkhand mob lynching have gone viral since the incident. In one of the videos, a man is seen hitting Tabrez Ansari with a wooden stick as the latter begs him to let him go.

0
3331

Seraikela-Kharsawan, Jharkhand: Shams Tabrez, 24, was caught by a mob on Tuesday evening, tied to a pole and beaten for more than seven hours and then handed over to the police on Wednesday morning after he fell unconscious.

24 வயது சாம்ஸ் தப்ரேஷ், திருடியதாக கூறி பிடித்தக் கும்பல் , அவரை கம்பத்தில் கட்டி வைத்து 7 மணி நேரத்துக்கும் மேலாக அடித்து அவர் நினைவிழந்தப் பிறகு  போலீஸில் ஒப்படைத்துள்ளது. 

ஜார்க்கண்டில் சாம்ஸ் தப்ரேஷ் இரு சக்கர வாகனத்தைத் திருடியதாக கூறி ஒரு கும்பல் அவரை  பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததால் அவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.  சாம்ஸ் தப்ரேஷ் திருடியதாக கூறி ஒரு கும்பல் அவரை  செவ்வாய்க்கிழமை பிடித்தது. பின்பு கம்பத்தில் கட்டிவைத்து 7  மணி நேரத்துக்கும் மேலாக அடித்தது அக்கும்பல். அடிக்கும்போது ஜெய்ஶ்ரீராம், ஜெய் ஹனுமான் என்று கூறச் சொல்லி அடித்ததாக கூறப்படுகிறது. நினைவிழந்த பிறகு அவரை போலீசாரிடம்  ஒப்படைத்திருக்கிறது அக்கும்பல். போலீஸார் அவரை மருத்துவமனையில் அனுமத்திருக்கிறார்கள். பின்பு சிகிச்சை பலனின்றி அவர் சனிக்கிழமை உயிரிழந்தார். 

அவரை அடித்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பபட்டிருக்கிறது .  இது குறித்து தப்ரேஷின் உறவினர் கூறுகையில் முஸ்லிம் பெயராக இருந்ததால் அவர் இவ்வாறு தாக்கப்பட்டிருக்கிறார். அவர் திருடன் என்று சந்தேகத்தின்பேரில் அவர்கள் அவரி பிடித்திருக்கின்றனர் இருந்தாலும் இது மதம் சார்ந்த குற்றமே. ஏனென்றால் அடிக்கும் போது ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஹனுமான் என்று கூற சொல்லியிருக்கிறார்கள் என்றார். 

இது குறித்து அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் டாக்டர்கள் கூறுகையில் தப்ரேஷை மருத்துவமனைக்கு கொண்டுவந்த போது அவர் நினைவிழந்து கோமாவில் இருந்தார் என்றனர். 

ஹைதராபாத்தைச் சேர்ந்த அசாதீன் உவைசி இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் முஸ்லிம்களை கொலை செய்யும் முறை இது . முஸ்லிம்கள் கொலை செய்யப்படுவார்கள். மாட்டிறைச்சி வைத்திருந்ததாக , திருடியதாக, கடத்தலில் ஈடுபட்டதாக , லவ் ஜிகாத் – சந்தேகத்தின்பேரில் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படும். இதுதான் மோடியின் சப்கா விஸ்வாஸ் (sabka vishwas) என்று பதிவிட்டுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here