மோடியின் பிட்னஸ் சாவலுக்கு குமாரசாமி பதில் : எனது உடல்நிலைக் குறித்து அக்கறைச் செலுத்தியதற்கு நன்றி ஆனால் …..

0
159

கிரிக்கெட் வீரர் விராட் கோலி விடுத்த உடற்பயிற்சி சவாலை ஏற்றுக் கொண்ட மோடி, தான் வீட்டில் உடற்பயிற்சி செய்யும் விடியோவை இன்று சமூக வலைத் தளத்தில் வெளியிட்டார்.

விராட் கோலியின் சவாலை தான் ஏற்றுக் கொண்டதாகவும், தான் இதே உடற்பயிற்சி சவாலை கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமிக்கு விடுப்பதாகவும் இன்று (புதன்கிழமை) தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இது குறித்து தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமி டியர் மோடிஜி ,நான் உங்கள் சவாலை மதிக்கிறேன். எனது உடல்நிலை குறித்து அக்கறை செலுத்திய உங்களுக்கு நன்றி.

உடல் நலம் என்பது அனைத்துக்குமே தேவை என்பதை நான் நம்புகிறேன். எனது அன்றாட பணிகளில் யோகா பயிற்சியையும் நான் தொடர்ந்து கடைபிடித்து வருகிறேன்.

அதே சமயம், எனது உடல் நலனை விட, எனது மாநிலத்தின் நலனுக்கு நான் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறேன். எனது மாநிலத்தின் நலனைக் காக்க, மேம்படுத்த உங்களது ஆதரவும் தேவைப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்