பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டை ஏமாற்றிய முறைகேடு, ஊழல் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

பழைய 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டு செல்லாது என பிரதமர் மோடி 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி அறிவித்தார். இது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வங்கிகள், ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க முடியாமல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அவதிக்குள்ளாகினர். அன்றாட செலவுக்கு கூட பணம் இல்லாமல் மக்கள் நெருக்கடியால் தவித்தனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இதுபற்றி மேற்குவங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று தனது டிவிட்டர் பக்கத்தில்

‘‘இன்று மிக மோசமான கருப்பு தினம். பணமதிப்பிழப்பு நீக்கம் என்பது மிகப்பெரிய மோசடி, ஊழல், நமது பொருளாதாரத்தை, பல கோடி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தொழித்த நடவடிக்கை. இதை செய்தவர்களை மக்கள் உரியமுறையில் தண்டிப்பார்கள்.

பணமதிப்பு நீக்கத்தின் 2-ஆம் ஆண்டு நிறைவு தினம் என்பது கருப்பு நாள். இதை நான் மட்டும் கூறவில்லை. நாட்டின் மிகச்சிறந்த பொருளாதார மேதைகள் கூட இதை ஒப்புக் கொண்டுள்ளார்கள்’’ என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here