மோடியின் குஜராத்தில் தடுமாறும் பாஜக

0
410

குஜராத்தில் டிஜிட்டல், டிவி  விளம்பரங்களில் 88 சதவீதத்தை பாஜக ஆக்கிரமித்திருந்த போதிலும் மோடி பிறந்த இடத்திலேயே பாஜக வெற்றி பெறுவதில் பல பிரச்சனைகள் இருக்கிறது.  

குஜராத்தில் பாஜக விளம்பர பலகைகள் வைப்பதில் மட்டும் முன்னிலையில் இல்லை, டிஜிட்டல் , டிவி விளம்பரங்களிலும் பாஜகவே முதலிடத்தில் இருக்கிறது . 

குஜராத் தலைமை தேர்தல் அதிகாரி ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியிட்ட தகவலின்படி டிவி, ரேடியோ, சமூக வலைத்தளங்கள் போன்றவற்றில் வெளியான  விளம்பரங்களில் 88 சதவீதம்  பாஜக கட்சியுடையதுதான் .  

தேர்தல் ஆணையத்தின் ஊடகக் கண்காணிப்புக் கமிட்டியின் ஒப்புதலுக்குப் பிறகே அனைத்து அரசியல் விளம்பரங்களும் வெளியாகும். ஏப்ரல் 22-ஆம் தேதி வரையில் , தேர்தல் ஆணையத்தின்  ஒப்புதலுக்கு வந்த 200 விளம்பரங்களில், 173 பாஜகவுடையது. காங்கிரசின் விளம்பரங்கள் 27 மட்டுமே.

இதில், 112 பாஜக விளம்பரங்களுக்கும் 15 காங்கிரஸ் விளம்பரங்களுக்கும் ஒப்புதல் அளித்திருக்கிறது ஆணையம்.

இவ்வாறு விளம்பரங்களுக்கு பாஜக அதிகம் செலவழிப்பதை பார்க்கும்போது பாஜக , அதாவது மோடியின் சொந்த மண்ணிலேயே பாஜக வெற்றிக்காக அல்லல்படுகிறதோ என்ற எண்ணம் எழுகிறது . 

விளம்பரத்துக்குப் பெயர் போன கட்சி பாஜக. பாஜக-வின் ஒளிபரப்புத் துறை அமைச்சராக மோடி உள்ளார். பிரதமர் அதிகாரப்பூர்வமாகவே பல கோடிகளை விளம்பரத்துக்காக செலவழிக்கிறார் என்கிறார் குஜராத் காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் மனீஷ் ஜோஷி.  உண்மையில், மோடி அரசு ஐந்தாண்டு காலமும் உழைத்திருந்தால், விளம்பரத்துக்கு இத்தனை கோடிகளை செலவழிக்க வேண்டிய தேவை இல்லை எனவும்  அவர் கூறியுள்ளார். 

மோடி அரசின் வெற்றிகளையே நாங்கள் விளம்பரங்கள் மூலம் மக்களுக்கு எடுத்து செல்கிறோம் என்று பாரத் பாண்டியா , குஜராத் பாஜக செய்தி தொடர்பாளர் கூறுகிறார். 

 ‘மீண்டும் மோடி அரசு’ என்று எழுதி மோடியின் படத்தை மட்டுமே தாங்கிய விளம்பரங்கள் குஜராத்தில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளது.  விஜய் ரூபானி தலைமையிலான குஜராத் அரசுக்கு எதிராக  விவசாயிகள் மற்றும் சிறு குறு வணிகர்களுக்கு இருக்கும் கோபத்தை மறைப்பதற்காக   பாஜக அரசு இவ்வாறு விளம்பரங்கள் செய்திருக்கலாம் என்று  ஊடகங்கள் கூறுகின்றன. 

2017 சட்டபேரவைத் தேர்தல்கள் நடந்த போது பாஜகவுக்கு பெரும் சவாலாக இருந்தது காங்கிரஸ் கட்சி.  பாஜக போட்டிருந்த கணக்குகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு காங்கிரஸ் அதிக வாக்குகளைப் பெற்றது. பாஜக 99 இடங்களையும், காங்கிரஸ் 77 இடங்களையும் பெற்றது. 

பாஜக குஜராத்தில் மீண்டும் மோடியை வைத்தே வாக்கு சேகரிக்கிறது. 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக குஜராத்தின் 26 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் 20 தொகுதிளிலாவது வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்க்கிறது . 

2014 மக்களவை தேர்தலில் குஜராத்தின் 26 மக்களவை தொகுதிகளையும் கைப்பற்றியது பாஜக. ஆனால், இம்முறை 20 இடங்களையாவது பிடிக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கிறது.

வரலாறு காணாத வறட்சியால் துவண்டிருக்கும் குஜராத் மக்கள், பட்டேல் சிலைக்காக ரூ.3000 கோடி செலவழித்தது, புல்லட் ரயில் திட்டத்துக்காக வளமான விவசாய நிலங்களை பறித்தது, குஜராத் வர்த்தகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய பணமதிப்பழிப்பு ,  ஜி.எஸ்.டி போன்றவைகளால் குஜராத் மக்கள் பலவகையிலும் பாஜகவினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது தேர்தலில் எதிரொலிக்கும் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. 

2017 குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் பாஜகவுக்கு  சரிவைத் தந்தது  , அது  மக்களவை தேர்தலிலும் எதிரொலிக்கலாம் . 

theprint.in


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here