இந்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவில் ஊழல் இருப்பதாக ராணுவ வீரர் ஒருவர் கடந்த திங்களன்று பேஸ்புக்கில் ஒரு வீடியோ செய்தி வெளியிட்டார். இந்த வீடியோ செய்தி, இந்திய ராணுவ வீரர்களின் நிலையை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் இந்திய அரசியல் கட்சிகள், மத்திய அரசின் செயல்பாட்டை விமர்சித்து வருகின்றன.

இதையும் படியுங்கள் : பி.எஸ்.எஃப். வீரரைத் தொடர்ந்து சிஆர்பிஎஃப் வீரரின் மனக் குமுறல்

இந்நிலையில், பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், ”மோடி மற்றும் பிஜேபி, இந்திய சிப்பாய்களை மிகவும் மோசமான நிலையில் வைத்துள்ளனர், இந்த விவகாரத்தில் அவர்கள் இரட்டை வேடம் இடுகின்றனர்” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் இந்திய வீரர்கள் வெகுமதிக்கே தகுதியானவர்கள் என்றும், தண்டனைக்கு அல்ல என்றும் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : ”உண்ண உணவு இல்லை”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்