மோடியின் அடிமை ஊடகங்களுக்கு ராகுல் காந்தியிடம் கேட்க நிறைய கேள்விகள் இருக்கின்றன. மோடியிடம் கேட்க கேள்விகள் இல்லை.

ராகுல் காந்தி சிறுவனாக இருந்த போது நடந்த போஃபர்ஸ் ஊழல் பற்றி ராகுல் காந்தி பதிலளிக்க வேண்டும் என்று சில பத்திரிகையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அதே பத்திரிகையாளர்கள் ரஃபேல் பற்றி மோடி பதிலளிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புவதில்லை.

கடந்த நான்கு ஆண்டுகளாக ராகுல் காந்தி பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கும் சில ஊடகங்கள் மக்களுக்கு பதில் கூற கடமைப் பட்டிருக்கும் பிரதமர் மோடி ஏன் ஊடகங்களுக்கு பதில் அளிக்கவில்லை என்பதைப் பற்றி யோசிக்கவில்லை. ராகுல் காந்தி இதற்கு பதில் கூற வேண்டும் என்று அமித் ஷா தேர்தல் பிரச்சாரங்களில் கூறுவதைக் கேட்டு அப்பேச்சால் ஈர்க்கப்பட்ட சில ஊடகங்கள் அவ்வாறு கூறிக் கொண்டிருகின்றன.

லோக்சபாவில் வெறும் 45 எம்பிக்களை வைத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியும் ஒன்றா? பிரதமர் மோடி அவரது பொறுப்பிலிருந்து விலகி எப்போதும் எந்த பிரச்சனைக்கும் பதிலளிக்காமல் அமைதி காத்து வருகிறார். இந்திய வரலாற்றிலேயே ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பு கூட நடத்தாத பிரதமர் , பிரதமர் மோடி தான் . சுதந்தரமான ஊடகங்கள் குறைந்ததும் இவர் ஆட்சியில்தான் .

மோடியின் அடிமை ஊடகங்கள் ராகுல் காந்தி எல்லா பிரச்சனைகளுக்கும் பதில் கூற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன.

அடிமை ஊடகங்கள் மோடிக்கு பயந்தே இவ்வாறு செய்லபடுகின்றனர். மோடியின் ஆட்சிக்கு எதிராக பல செய்திகள் வெளியிட்டதால் தி குயின்ட் அலுவலகங்களிலும் , அதன் நிறுவனர் வீட்டுக்கும் வருமானவரி அதிகாரிகளை அனுப்பியது மோடி அரசு. அதற்கு முன்னர் என்டிடிவி நிறுவனத்துக்கும் இவ்வாறே நடந்தது. இந்த வருமான வரி சோதனைகளின் மூலம் மோடி எல்லா ஊடகங்களுக்கும் ஒரு செய்தியை அனுப்பியிருக்கிறார். அது என்னவென்றால் மோடியிடம் எந்தவொரு கேள்வியையும் கேட்க வேண்டாம் என்பதுதான்.

மோடி அரசாங்கம் அரை டஜன் தொலைக்காட்சி சேனல்களுக்கு ஒளிபரப்பு அனுமதி வழங்க மறுத்துவிட்டது. தி குயின்ட் நிறுவனர் ராகவ் பாலுக்கும் செய்தி தொலைக்காட்சி அமைக்க அனுமதி மறுக்கப்பட்டது . ஒரே ஒரு விதிவிலக்கு என்னவென்றால் பாஜகவின் ராஜிவ் சந்திரசேகர், அர்னாப் கோஸ்வாமி நடத்தும் ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

தங்களது ஆட்சியைப் பற்றி எதிர் கருத்துக்களை தெரிவிப்பவர்களுக்கு அரசு விளம்பரங்கள் தரப்படுவதில்லை. இவ்வாறு ராஜஸ்தான் பத்திரிகைக்கு நடந்துள்ளது. வசுந்தரா ராஜேவை விமர்சித்ததற்காக உச்ச நீதிமன்றம் தலையிடுவது வரை ராஜஸ்தான் பத்திரிகைக்கு அரசு விளம்பரங்கள் அளிக்கப்படவில்லை.

இந்த அடிமை ஊடகங்கள் ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்புகிறார்கள் . ரோமானிய பாணி கிளாடியேட்டர் போட்டிகளில் கத்திக் கொண்டே இருப்பது போல் சத்தமிடுகிறார்கள் தொலைக்காட்சிகளில் .

எம்ஜே அக்பர் விவகாரம்

ஏன் ராகுல் காந்தி #MeToo பற்றி எதுவும் சொல்லவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள். ஏன் நாம் மோடியிடம் அல்லவா இந்த கேள்வியை எழுப்பியிருக்க வேண்டும். எம்ஜே அக்பர் விவகாரத்தில் மோடி மௌனமாகவே இருக்கிறார். எம்ஜே அக்பர் மீது 15க்கும் மேற்பட்ட பெண்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். பெண்களுக்காக பாடுபடுகிறேன் என்று கூறிக் கொள்ளும் மோடி , பெண் குழந்தைகளை பாதுகாப்போம் படிக்க வைப்போம் என்று கூறும் மோடி ஏன் எம்ஜே அக்பர் விவகாரத்தில் எதுவும் கூறாமல் இருக்கிறார் என்று அவரிடம் கேள்வி எழுப்பவில்லை இந்த அடிமை ஊடகங்கள் . (தற்போது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய இணையமைச்சர் எம்ஜே அக்பர் ராஜினாமா செய்துவிட்டார்) .

பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளருக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடர்ந்த எம்.ஜே. அக்பர், இணை அமைச்சரை ஏன் மோடி அரசு பாதுகாக்கிறது? மோடி தனது அமைச்சரை ஒதுக்கி வைத்துவிட்டு இந்த விவகாரம் குறித்து தனி விசாரணை நடத்தக்கூடாது?

இருந்தாலும் இந்த அடிமை ஊடகங்கள் பெண்களை தொடர்ந்து வேட்டையாடிய எம்ஜே அக்பருக்கு மோடி ஏன் துணை நிற்கிறார் என்று மோடியிடம் கேட்க பயப்பட்டது . மோடியை பிடிக்காதவர்கள்தான் இவ்வாறு செய்கிறார்கள் என்று கூறி இந்த விவகாரத்தில் இருந்து தப்பிவிடலாம் என்று மோடி அரசு கணக்கிட்டது. மோடியின் அடிமை ஊடகங்கள் ராகுல் காந்தி இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று கூறிகொண்டே இருப்பார்கள் .

மோடியின் அடிமை ஊடகங்கள் தங்கள் தலைவரின் குரலிலே பேசுகிறார்கள் . மோடியின் பக்கோடா பொருளாதாரம் , மோடியின் பொய் வாக்குறுதிகள் பற்றி எந்த அடிமை ஊடகங்களும் கேள்வி எழுப்புவதில்லை.

நாட்டில் பசுவின் பெயரால் நடந்த கும்பல் கொலைகள் பற்றி மோடியிடம் இந்த அடிமை ஊடகங்கள் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் ராகுல் காந்தி பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றன.

ரஃபேல் ஒப்பந்தம்

ரஃபேல் ஒப்பந்த்தத்தை எடுத்துக் கொண்டால் மோடிதான் முழு பொறுப்பு.ஆனால் தினமும் ரஃபேல் ஒப்பந்தத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து வெளிவரும் செய்திகள் குறித்தும், ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை மட்டுமே இந்திய அரசு பரிந்துரைத்தது என்று பிரான்சின் முன்னாள் அதிபர் பிராங்கோய்ஸ் ஹோலந்தே கூறும் போதும் இந்த அடிமை ஊடகங்கள் மௌனம் காக்கின்றன. ரஃபேல் ஒப்பந்த்தத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து ராகுல் காந்தியின் செய்தியாளர்கள் சந்திப்பை இந்த அடிமை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தன. ரஃபேல் ஒப்பந்தம் பற்றி பல மாதங்களாகவே மோடி வாய் திறக்காமல் மௌனமாகவே இருக்கிறார்.

வரி செலுத்தும் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்று மோடி தெளிவாக நம்புகிறார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ரஃபேல் ஊழலில் மோடி ஈடுபட்டிருப்பார் என்பதை யாரும் நம்பமாட்டார்கள் என்று கூறியதை மோடியின் அடிமை ஊடகங்கள் தலைப்புச் செய்திகளாகவும், முழு நேரச் செய்திகளாகவும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின.
போஃபர்ஸ் ஊழல் நடந்த போது சிறுவனாக இருந்த ராகுல் காந்தி தற்போது போஃபர்ஸ் ஊழலைப் பற்றி விளக்க வேண்டும் என்று மோடியின் அடிமை ஊடகங்கள் கேட்கின்றன.

அதனால் ராகுல் காந்தி பதில் அளிக்க வேண்டும் என்ற குரல்கள் நியூஸ் அறைகளில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.

Courtesy : The Wire

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here