மோடியின் ஃபிட்னெஸ் வீடியோ தயாரிக்க ரூ35லட்சம் செலவாகவில்லை – தகவல் & ஒளிபரப்புத் துறை அமைச்சர்

0
250

மோடியின் ஃபிட்னெஸ் வீடியோ தயாரிக்க எந்த பணமும் செலவழிக்கவில்லை என்று விளையாட்டுத்துறை மற்றும்
தகவல் & ஒளிபரப்புத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தூர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் ஃபிட்னெஸ் வீடியோ மற்றும் ஒளிப்படங்கள் தயாரிக்க ரூ35 லட்சமும், சர்வதேச யோகா தினத்துக்கு விளம்பரங்கள் தயாரிக்க இந்திய ஆயுஷ் அமைச்சகம் ரூ20 கோடியும் செலவிட்டதாக சில் ஊடகங்களில் வெளியான செய்தியை முன்னாள் அமைச்சர் சஷி தரூர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்த டிவிட்டர் பதிவிற்கு பதில் தெரிவித்த இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தூர் அந்த வீடியோ தயாரிக்க எந்தப் பணமும் செலவாகவில்லை. அதாவது மோடியின் ஃபிட்னெஸ் வீடியோ தயாரிக்க ரூ35லட்சம் செலவாகவில்லை என்றும் அந்த வீடியோ பிரதமர் அலுவலகத்தில் இருக்கும் ஒளிப்பதிவாளரால் பதிவு செய்யப்பட்டது என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் டிவீட்டுக்கு பதில் தெரிவித்த முன்னாள் அமைச்சர் சஷி தரூர் போடியின் ஃபிட்னெஸ் வீடியோ தயாரிக்க ரூ35 லட்சம் செலவழிக்கவில்லை என்பது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் மக்களின் வரிப்பணமான ரூ20 கோடியை யோகா விளம்பரத்திற்கு இந்திய ஆயுஷ் அமைச்சகம் செலவிட்டதுதானே என்று கேட்டுள்ளார்.

இந்த ஃபிட்னெஸ் சவாலைத் துவக்கி வைத்தவர் இந்த விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தூர்தான். ராஜ்யவர்தன் சிங் ரத்தூரின் சவாலை ஏற்று விராட் கோலி ஃபிட்னெஸ் வீடியோ வெளியிட்டார். விராட் கோலியின் சவாலை ஏற்று பிரதமர் மோடி ஃபிட்னெஸ் வீடியோ வெளியிட்டார்.