பிரதமர் மோடியால் வாராணசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறமுடியுமா? என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதிலடி தந்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் இன்று (சனிக்கிழமை) பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் வெவ்வேறு கூட்டங்களில் பங்கேற்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை தாக்கி பேசினர்.

இதற்கு பதிலடி தரும் வகையில் மம்தா பானர்ஜி கூறியதாவது

மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு தலைவர்கள் கிடையாது. மாநிலத்தின் கலாச்சாரம் குறித்து எந்த ஒரு சிந்தனையும் இல்லாத வெளிநபரை அவர்கள் களத்தில் இறக்குகின்றனர். அவர்கள் தேர்தலுக்கு முன் வருவார்கள், அதன் பிறகு திரும்பி சென்றுவிடுவார்கள். அவர்களுக்கு மேற்கு வங்க மக்களுடன் எந்த தொடர்பும் இல்லை. மேற்கு வங்கம் குறித்து சிந்திப்பதற்கு முன்பாக அவர்கள் தங்களது மாநிலத்தில் தங்கள் பணியை செய்யட்டும்.

நரேந்திர மோடியை டெல்லியை பார்த்துக்கொள்ள சொல்லுங்கள். வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு மோடியால் வெற்றி பெறமுடியுமா? அவர் வெற்றி பெறுவாரா என்பது குறித்து அவர் சிந்திக்க வேண்டும். யோகி ஆதித்யநாத்தை அவருடைய (உத்தரப் பிரதேசம்) மாநிலத்தை கவனித்துக்கொள்ள சொல்லுங்கள்.

வெளியில் இருந்து வரும் தலைவர்கள் யாரும் மேற்கு வங்கம் குறித்து சிந்திக்க வேண்டாம். அவர்கள் மாநிலத்தை அவர்கள் கவனிக்கட்டும். மேற்கு வங்கத்தால் தன்னை பார்த்துக்கொள்ள முடியும். அதற்கு வெளிநபர்கள் யாரும் தேவையில்லை என்றார்.

Courtesy : Economic Times

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here