டெல்லியில் 25வது நாளாக தொடரும் தமிழக விவசாயிகள் போராட்டத்தில், மோடியைப் போன்று வேடமணிந்த நபருக்கு, விவசாயிகள் தங்களின் கையைக் கிழித்து ரத்தத்தால் நெற்றியில் பொட்டு வைத்து, ரத்த அபிஷேகம் செய்தனர்.

இதையும் படியுங்கள் : ரத்தாகிறதா ஆர்கே நகர் இடைத்தேர்தல்?

விவசாயக் கடன்களைத் தள்ளுபடிசெய்ய வேண்டும், வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தேசிய நதிகள் இணைக்க வேண்டும் உள்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில், கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : மாட்டிறைச்சியைக் காட்சிக்கு வைத்ததாகக் கூறி சிறுவன் உட்பட 3 பேர் கைது

இந்நிலையில், 25வது நாளான வெள்ளிக்கிழமையன்று தமிழக விவசாயிகள் மோடி போன்று வேடமணிந்த நபருக்கு, தங்களின் கைகளைக் கிழித்து அதில் வழியும் ரத்தத்தை மோடி வேடமணிந்த நபரின் நெற்றியில் பொட்டாக வைத்தனர். மேலும், விவசாயிகள் அனைவரும் தங்களது கைகளைக் கிழித்து அந்த ரத்தத்தை மோடியின் கால்களில் தடவி, பேரணியாகச் சென்று போராடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : இந்தியர்களுக்கு அடி மேல் அடி; பிரிட்டன் விசாக் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்