4 மாதங்களுக்குள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுங்கள் அல்லது நாடு முழுவதும் போரட்டம் வெடிக்கும் என்றும் பிரதமர் மோடிக்கு வெளிநாஅடுகளில் இருக்கும் மசூதிக்கு செல்ல நேரமிருக்கிறது; அயோத்தியில் இருக்கும் கோயிலுக்கு வர நேரமில்லை என்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் மூத்த தலைவர் பிரவீண் தொகாடியா கூறியுள்ளார்.

4 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவந்து ராமர் கோயிலைக் கட்டுங்கள் அல்லது நாடு தழுவிய போரட்டத்தை எதிர்கொள்ளுங்கள் என்று பிரவீண் தொகாடியா கூறியுள்ளார்.

பாஜக மக்களுக்கு கொடுத்த மிகப் பெரிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அயோத்தியில் ராமர் கோயில் கட்டவில்லை.
தற்போது பாஜக தலைவர்கள் அயோத்தியில் கோயில் கட்டுவதைப் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பிறகு தீர்மானிப்போம் என்று கூறுகிறார்கள் .

மோடி கோடிக்கணக்கான ஹிந்துக்களை ஏமாற்றி விட்டார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக அவர்கள் இன்னமும் சட்டமியற்றவில்லை.

2018 அக்டோபர் மாதத்திற்குள் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி ராமர் கோயில் கட்ட வேண்டும் இல்லையேல் கோடிக்கணக்கான இந்துக்கள் தெருவில் இறங்கி போராடுவார்கள் என்று ஃபைசியாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பிரவீண் தொகாடியா கூறினார்.

வெளிநாடுகளில் உள்ள மசூதிகளுக்கு செல்ல பிரதமர் மோடிக்கு நேரம் இருக்கிறது. ஆனால், அயோத்திக்கு வருவதற்கும், அங்குள்ள ராம்லாலா கோயிலில் வழிபாடு நடத்துவதற்கும் மட்டும் நேரம் இல்லை. அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டுவதற்கு எந்தவித நடவடிக்கையையும் மோடி அரசு எடுக்கவில்லை. மோடி அரசு இந்துக்களையும் கடவுள் ராமரையும் ஏமாற்றிவிட்டார் என்றும் கூறினார்.

(இச்செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here