மோடிக்கு எதிராக ஹூஸ்டனில் போராட்டம் நடத்திய அமைப்புகள்

0
251

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு எதிராக பல்வேறு அமைப்பினர் கண்டனப் போராட்டம் நடத்தினர்.

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஹுஸ்டன் நகரில் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றார். 50,000 இந்தியர்கள் பங்கேற்ற இந்த பிரமாண்ட நிகழ்வில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் கலந்து கொண்டார்.

மோடியும் டிரம்ப்பும் இந்தியர்களிடையே உரை நிகழ்த்தினர். இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அரங்கத்துக்கு வெளியே பல்வேறு அமைப்பினர் மோடிக்கு எதிரான போராட்டங்களை நடத்தினர்.

ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவு நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இஸ்லாமியர்களும் தலித்தும் கும்பல் வன்முறையாளர்களால் அடித்துக் கொல்லப்படுவதை கண்டித்தும் பதாகைகள் ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பினர். குஜராத் கலவரத்தில் அப்போதைய முதல்வராக இருந்த மோடி மீது குற்றம்சாட்டிய சஞ்சீவ் பட், லாக் அப் மரண வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

பஞ்சாப் தனிநாடு கோரும் காலிஸ்தான் தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here