பிரதமர் மோடிக்கு சத்யமேவ ஜெயதே என்பதற்கான அர்த்தம் தெரியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

காங்கிரஸ் சார்பில் சிக்மகளூரில் நடைபெற்ற புதன்கிழமை (இன்று) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ”நான் ஆதி சங்கராச்சாரியாரின் சிருங்கேரி மடத்திற்கு சென்றிருந்தேன். அங்கு 14 வயது நிரம்பியவர்களுக்குக்கூட சத்யமேவ ஜெயதே என்பதற்கான அர்த்தம் புரிந்துள்ளது. ஆனால் பிரதமர் மோடிக்கு இதன் அர்த்தம் புரியவில்லை.” என விமர்சித்தார்.

rahul-1

பசவண்ணா குறித்து பேசும் பிரதமர் மோடி, அவர் கூறிய சத்திய போதனைகளைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார் எனவும் விமர்சித்தார். மேலும், ”டோக்லாம் எல்லையில் சீன அரசு விமான நிலையம் மற்றும் ஹெலிபேட் அமைத்து வருகிறது. ஆனால் இது குறித்து பிரதமர் மோடி மவுனம் காத்து வருகிறார். வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினை என அனைத்துப் பிரச்சினைகளிலும் மோடி பதிலளிக்காமல் அமைதியாக இருக்கிறார்” எனவும் குற்றம் சாட்டினார்.

ஊழல் செய்து சிறை சென்றவர்களை மேடையில் வைத்துக்கொண்டு ஊழல் ஒழிப்பு பற்றி பிரதமர் மோடி பேசுவதாகவும், தனது நண்பர்களுக்குப் பயனளிக்கும் வகையில் ரஃபேல் விமானம் ஒப்பந்தம் செய்யும்போது ஊழல் அவரது கண்களுக்குத் தெரியவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here