2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த படுகொலைக்குப் பிறகு, அன்றைய குஜராத் முதல்வரான மோடி அமெரிக்காவுக்குள் நுழையக்கூடாது என அமெரிக்க அரசு தடை விதித்திருந்தது. 2014-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதை அடுத்து, பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற சில நாட்களிலேயே இந்தத் தடை தளர்த்தப்பட்டது. அதன் பிறகு அமெரிக்கா சென்ற மோடிக்கு அமெரிக்க அரசின் முழு மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போதும் சில அமைப்புகள் மோடியின் அமெரிக்க வருகையின்போது எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் சனிக்கிழமை நடந்த தகவல் தொழிற்நுட்ப பெருநிறுவனங்களின் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் நரேந்திரமோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் மோடி செல்லும் வழியில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. ”Alliance for Justice and Accountability” என்ற தன்னிச்சையான சட்ட கண்காணிப்பகம் சார்பில் இந்த பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

92E-DSCF8580

92E-DSCF8583

92E-DSCF8590

Digital-ad-board-1-ModiFail-AJA-Fwy-84-Gateway-Blvd-Newark-CA-20150925

Digital-ad-board-3-ModiFail-AJA-Gateway-Blvd-Newark-CA-20150925

Digital-ad-board-5-ModiFail-AJA-Gateway-Blvd-Newark-CA-20150925

Digital-ad-board-6-ModiFail-AJA-Gateway-Blvd-Newark-CA-20150925

படங்கள்:modifail.com

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்