மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடிக்க ஒப்புக் கொண்ட படம், மோகினி. 2016 மே மாதம் தொடங்கிய இந்தப்பட வேலைகள் என்னவானது?

த்ரிஷா முதல்முறையாக நடித்த நாயகி மையப்படம் நாயகி. தமிழ், தெலுங்கில் தயாரான அப்படம் இருமொழிகளிலும் தோல்வியடைந்தது. த்ரிஷாவின் நாயகி மையப்பட முயற்சியை நாயகியின் தோல்வி தடுக்கும் என்று நினைத்த நேரத்தில் அவர் ஒப்புக் கொண்ட படமே மோகினி. இதுவும் நாயகி மையப்படம். மாதேஷ் இயக்கம். பெயருக்கேற்ப ஹாரர் ஜானரில் படத்தை எடுத்துள்ளனர்.

2016 இல் லண்டனில் தொடங்கப்பட்ட இந்தப் படம் குறித்து அதிக தகவல்கள் இல்லை. மோகினி புகையாக மறைந்தாலும் அப்படி விட்டுவிட முடியுமா? நாம் விசாரித்ததில் படம் முடிவடைந்து, பின்னணி இசைச் சேர்ப்பும் சென்ற வாரம் நிறைவடைந்திருக்கிறது. மோகினிக்கு விவேக் – மெர்வின் இசையமைத்திருந்தாலும் பின்னணி இசையை அருள்தேவ் அமைத்திருக்கிறார்.
Dfjja1PWAAAP2UG
படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால் விரைவில் திரைக்கு கொண்டுவரும் முயற்சிகள் நடக்கின்றன.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்