விஜய் நடித்து அட்லி இயக்கத்தில் வெளியான படம் பிகில். தமிழகத்தில் வசூலை வரிக்குவித்த பிகில் கேரளாவிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்த வகையில், கேரளாவில் வெளியான முதல்நாளே ரூ. 5 கோடி வசூலித்தது பிகில். இது மோகன்லால், மம்மூட்டி படங்களே செய்யாத வசூல் சாதனை. மேலும் கேரளாவில் பிகில் மொத்தம் 19.6 கோடி வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அந்த கணக்கில் பார்க்கும்போது, 2019 ஆம் ஆண்டு கேரளாவில் வெளியான தமிழ் படங்களில் விஜய் படமே அதிகப்படியாக வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தப்படியாக கார்த்தியின் கைதி 9.45 கோடியும், பேட்ட 8.5 கோடியும், காப்பான் 5. கோடியும், பேரன்பு 3.9 கோடியும், அசுரன் 2.5 கோடியும், விஸ்வாசம் 2.4 கோடியும், நேர்கொண்ட பார்வை2.1 கோடியும், என்ஜிகே 1.9 கோடியும், கடாரம் கொண்டான்1.6 கோடியும் கேரளாவில் வசூலித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here