மோகன்லாலின் ஒடியன் படத்தில் தமிழ் இசையமைப்பாளர்

0
212

விக்ரம் வேதா படத்துக்குப் பிறகு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் க்கு நிறைய வாய்ப்புகள். கரு, சக்தி படங்களுக்கு இசையமைத்து வருகிறவர் அடுத்து மோகன்லாலின் மலையாளப் படத்துக்கு இசையமைக்கிறார்.

மோகன்லால் நடிப்பில் பெரும் பொருட்செலவில் தயாராகிவரும் படம் ஒடியன். ஸ்ரீகுமார் மேனன் இயக்கிவரும் இந்தப் படத்துக்கு இசையமைக்க சாம் சிஎஸ் ஸை ஒப்பந்தம் செய்துள்ளனர். விக்ரம் வேதா படத்தின் பின்னணி இசை சிறப்பாக இருந்தமையால் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

ஒடியன் படம் பல காலகட்டங்களில் நடைபெறும் கதை. மோகன்லால் பலவித தோற்றங்களில் நடிக்கிறார். எண்பது சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சாமை ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: மீன்வளத் துறையில் ஏன் மீனவர்களுக்கு இடமில்லை

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்