ஹானர் நோட் 10 ஸ்மார்ட்ஃபோன் சீனாவில் விற்பனைக்கு வந்தது. பெரிய டிஸ்பிளே, மொபல் சூட்டை தனிக்கும் தொழில் நுட்பம் என புதிய அம்சங்களுடன் வருகிறது இந்த மொபைல். நடுத்தர விலை செக்மென்டில் இந்த மொபைல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் இருக்கும் நைன் லிக்விட் கூலிங் தொழில்நுட்பம், மொபைல் சூடாவதை கண்காணித்து, 10 டிகிரி செல்சியஸ் வரை சூட்டை குறைக்க உதவுகிறது. செயற்கை நுண்ணறிவால் ஆன கேமராவும் இதன் சிறப்பம்சம். 
ஹானர் நோட் 10-ன் விலை:
ஹானர் 10 மொபைலில் மூன்று வகைகள் உள்ளன 4ஜி.பி ரேம்/ 64 ஜி.பி ஸ்டோரேஜ் 2,799 சீன் யென் (28,100 ரூபாய்). 6ஜி.பி ரேம்/128 ஜி.பி ஸ்டோரேஜ் 3,199 சீன யென் (32,100 ரூபாய்). 8ஜி.பி ரேம்/256 ஜி.பி ஸ்டோரேஜ் 3,599 சீன யென் (36,100 ரூபாய்). அனைத்து வெரியன்ட்களும் ஆகஸ்ட் -ம் தேதி விற்பனைக்கு வருகின்றன. மிட்நைட் கருப்பு, ஃபான்டம் ப்ளூ மற்றும் லில்லி ஒயிட் ஆகிய நிறங்களித கிடைக்கும். 
சிறப்பம்சங்கள்:
இரண்டு சிம் ஸ்லாட்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்ஃபோன், ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0.0 இயங்குதளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 6.5 இன்ச் முழு ஹெச்.டி அமோல்ட் டிஸ்பிளே கொண்டது. 
970 சி ஸ்னாப்டிராகன் பிராசஸர் இருக்கிறது. எஸ்.டி கார்டு மூலம் 256 ஜி.பி என்ற ஸ்டோரேஜை நீட்டித்துக் கொள்ளலாம். 
பின் பக்கத்தில், 24 மெகா பிக்சல் மற்றும் 16 மெகா பிக்சல் சென்சார் கொண்ட டூயல் கேமராவும் உள்ளது. ஒரு எல்.இ.டி ஃபிளாஷும் உள்ளது. முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. 
நெட்வொர்க் தொடர்பை பொறுத்தவரை 4ஜி எல்.டி.இ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி5.0, எஃப்.எம் ரேடியோ, என்.எஃப்.சி, யூ.எஸ்.பி, ஜி.பி.எஸ், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக்கும் இதில் உள்ளது. 5000mAh பேட்டரியும் இதன் சிறப்பம்சம். பின்புறத்தில் ஃபிங்கர் பிரின்ட் சென்சாரும் உள்ளது.
 

courtesy :gadgets.ndtv.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here