மொபைல்களுக்கு இலவச VPN சேவை வழங்கும் ஒபேரா

0
604

மொபைல் போன்களுக்கு இலவச VPN சேவையினை ஒபேரா நிறுவனம் தனது புதிய செயலி மூலம் வழங்கியுள்ளது. VPN என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்கு, இணையதளத்தில் உள்ள பூலோகக் கட்டுப்பாடுகளைத் தகர்த்து பாதுகாப்பாக நாம் காண விரும்பும் இணையதளங்களைக் காண உதவும் சேவைதான் இந்த Virtual Private Network எனப்படும் VPN சேவை.

இதன் மூலம் காஃபி ஷாப், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் ஆகிய இடங்களில் இலவசமாக வழங்கப்படும் பொது இணையதள இணைப்பை பாதுகாப்பாக பயன்படுத்தலாம். VPN மூலம் ஒருவர் பார்வையிடும் தளங்கள் மற்றும் தகவல்கள் இணையதள இணைப்பை வழங்கும் ISP எனப்படும் இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களிடமிருந்துகூட மறைத்துவிட முடியும். இதனால் ஒருவரது ப்ரைவசி முற்றிலுமாக பாதுகாக்கப்படும்.

VPN சேவைகளைப் பல நிறுவனங்கள் வழங்கி வந்தாலும் சில நிறுவனங்களே சிறப்பான சேவை அனுபவத்தைத் தருகின்றன. அதில் பெரும்பான்மையானவை கட்டண சேவைகளாகவே இருக்கின்றன. இலவச VPN சேவை வழங்கும் பல நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவுவரை மட்டும்தான் இலவச சேவைகளை வழங்குகின்றன. இந்நிலையில் தரமான, எல்லையற்ற VPN சேவையை மொபைல் போன்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது ஒபேரா நிறுவனம்.

தங்களது செயலி மூலம் VPN சேவையோடு இணையதள இருப்பிடத்தை மாற்றும் அம்சத்தையும் ஒபேரா வழங்குகின்றது. இந்தியாவில் இருந்துகொண்டு அமெரிக்கா, கனடா, ஜெர்மனி போன்ற நாடுகளில் இருப்பது போன்று இணையதளத்தைப் பயன்படுத்த முடியும். உதாரணத்திற்கு நெட்ஃபிளிக்ஸ் போன்ற சேவைகளில் அமெரிக்காவிற்கு மட்டுமான தொடர்கள் போன்றவற்றை இந்தியாவில் இருந்துகொண்டே பார்க்கலாம். மேலும் இதனுடன் ஒருவர் பயன்படுத்தும் வைஃபையின் பாதுகாப்பு, தவிர்க்கப்பட்ட விளம்பரங்கள் ஆகியவற்றையும் இந்தச் செயலி மூலம் அறிய முடியும்.

இந்தச் செயலியை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்