‘மொகல் சாலை’யை மகாராஜா அக்ரசென்’ சாலை என்று பெயர் மாற்றம் செய்த யோகி அரசு

0
269

உத்தரபிரதேசம் ஆக்ரா நகரில் உள்ள மொகல் சாலைக்கு (Mughal Road) மகாராஜா அக்ரசென் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது 

இன்று(நவம்பர் 26), இதுகுறித்து, செய்தியாளர்களிடம்  ஆக்ரா நகரத்தின் மேயர் நவீன் ஜெயின்  கூறியதாவது “இங்குள்ள கம்லா நகர் பகுதியில் உள்ள மொகல்  சாலைக்கு அருகில் வசிக்கும் மகாராஜா அக்ரசேனை பின்பற்றுபவர்களின் கோரிக்கையை ஏற்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த பெயர் மாற்றம் மகாராஜா அக்ரசென் பின்பற்றுபவர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது” என்றார்.

சாலையின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததையடுத்து, செப்டம்பர் 27 அன்று ஆக்ரா நகர் நிர்வாகக் சபையில் ஒரு முன்வரைவு நிறைவேற்றப்பட்டது என்றும் அதைத்தொடர்ந்து, சபை உறுப்பினர்கள் முன்வரைவை நிறைவேற்றினர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“விகல் சோக்கிலிருந்து கம்லா நகர் வரை செல்லும் இச்சாலைக்கு மொகல்  சாலை என்று எப்படி பெயரிடப்பட்டது என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், தற்போது மகாராஜா அக்ரசேன் சாலை என்று பெயரிடப்பட்டதால், எதிர்கால சந்ததியினர் இதனால் உத்வேகம் பெறுவார்கள்” என்று ஆக்ரா மேயர் நவீன் ஜெயின் குறிப்பிட்டுள்ளார்.

இந்து மத இதிகாசங்களின்படி, ராமரின் மகனான குஷ்ஷன்-னின் வம்சாவழியைச் சேர்ந்தவர் மகாராஜா அக்ரசென்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here