மைக்ரோசாப்ட் டீம்ஸ் : ஜூம் சேவையை வீழ்த்த அசத்தல் அறிவிப்பு வெளியானது

Users can join a virtual call on Microsoft Teams without requiring a Microsoft Account or the Teams app on their devices.

0
62

ஜூம் சேவையுடனான போட்டியை எதிர்கொள்ளும் வகையில் டீம்ஸ் சேவையில் நாள் முழுக்க இலவச வீடியோ மற்றும் வாய்ஸ் கால் வசதியை வழங்கப்படுவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய அறிவிப்பின் படி மைக்ரோசாப்ட் டீம்ஸ் இலவச சேவையில் அதிகபட்சம் 300 பேர் வரை கலந்து கொண்டு சுமார் 24 மணி நேரத்திற்கு உரையாட முடியும்.

இலவச சேவை மட்டுமின்றி மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவையில் அதிகபட்சம் 249 பேருடன் சாட் செய்யும் வசதி, 49 பேருடன் விர்ச்சுவல் உரையாடல்களை ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் வசதியை வழங்கும் அப்டேட் படிப்படியாக வெளியிடப்பட்டு வருகிறது.

நாள் முழுக்க வீடியோ காலிங் வசதியுடன் மைக்ரோசாப்ட் டீம்ஸ் ஜூம் சேவையை பயன்படுத்துவோரை ஈர்க்க முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் Thanksgiving தினத்தைமுன்னிட்டு ஜூம் தனது சேவையில் 40 நிமிடங்களுக்கு வழங்கப்பட்ட சேவையை தற்காலிகமாக நீக்குவதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ஜூம் சேவை அறிவிப்பை தொடர்ந்து மைக்ரோசாப்ட் இலவச அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

புதிய இலவச சேவை வசதியை மைக்ரோசாப்ட் தனது வலைதள பதிவின் மூலம் அறிவித்து இருக்கிறது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here