அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுத்து இருக்கிறது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அமெரிக்காவின் மிதப்பு மிக்க நிறுவனங்களில் முதன்மை இடத்தை பிடித்து இருக்கிறது. 2010ம் ஆண்டில் இருந்து முதன்மையிடத்தில் இருக்கும் ஆப்பிள் நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் முதல் முறையாக பின்னுக்குத் தள்ளி இருக்கிறது. தற்சமயம் மைக்ரோசாஃப்ட் நிறுவன மதிப்பு 75330 கோடி டாலர்களாக இருக்கிறது.

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆகஸ்டு மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் ஒரு லட்சம் கோடி டாலர்கள் மதிப்பு பெற்ற முதல் நிறுவனமாக உருவெடுத்த நிலையில், தற்சமயம் ஆப்பிள் நிறுவன மதிப்பு 74680 கோடி டாலர்களாக சரிந்துள்ளது. புதிய ஐபோன் மாடல்கள் எதி்ர்பார்த்த அளவு விற்பனையாகாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் நிறுவனங்களைத் தொடர்ந்து அமேசான் நிறுவனம் 73660 கோடி டாலர்கள் மதிப்பு பெற்று மூன்றாவது இடத்திலும் கூகுளின் ஆல்ஃபாபெட் நிறுவனம் 72550 கோடி டாலர்கள் மதிப்பு பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதலிடம் பெற்று இருக்கும் நிலையில், சிலிகான் வேலியின் தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனங்களில் ஆல்ஃபாபெட் நிறுவனம் மதிப்புமிக்க நிறுவனமாக இருக்கிறது.

ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் தகவல் திருட்டு விவகாரங்களில் சிக்கித்தவிக்கும் நிலையில் முதலீட்டாளர்கள் கிளவுட் சேவைகள் மற்றும் மென்பொருள் சேவை வழங்கும் நிறுவனங்களில் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கின்றனர். 

கிளவுட், கேமிங் மற்றும் சர்ஃபேஸ் லேப்டாப் மாடல்களின் விற்பனை மூலம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மொத்தம் 2910 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது, இதில் 2019 முதல் காலாண்டு வருமானம் மட்டும் 880 கோடி ஆகும். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மொத்த வருமானம் மட்டும் 34 சதவிகிதம் அதிகரித்து இருக்கும் நிலையில், வருமானம் 19 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here