நாளை (ஞாயிற்றுக்கிழமை) உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்தத் தேரோட்டத்திற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள தேர்தான், ஆழித்தேர்களில் முதன்மையானது. ஆசியாவிலேயே மிகப்பெரியதான இந்த ஆழித்தேர் 96 அடி உயரமும், 31 அடி அகலமும், 350 டன் எடையும் கொண்டது. இந்தத் தேரை நகர்த்துவதற்கே 5 ஆயிரம் பேர் தேவை.

அப்படிப்பட்ட பிரமாண்டமான ஆழித்தேரோட்டத்திற்காக தேர் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தேரில் அமைக்கப்படும் நான்கு குதிரை சிலைகளே பிரம்மாண்டமானதாக இருக்கும். தேர் வீதி உலா வரும்போது குதிரைகள் அசைந்தாட, கண்கொள்ளா காட்சியாக இருக்கும் என்கிறார்கள் திருவாரூர் மக்கள்.

உலகப்பிரசித்திப் பெற்ற ஆழித்தேரோட்ட கொண்டாட்டத்திற்காக தற்போதே திருவாரூர் தயாராகி வருகிறது. தேரோட்டத்தில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக ஆய்வு செய்த ஆட்சியர் நிர்மல்ராஜ், உரிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்