உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31-ஆம் நாளன்று கடைபிடிக்கப்பட்டு உலகின் மிகக்கொடிய நோயான புற்றுநோய் ஏற்படுவதற்கு மூலக்கராணமாக கருதப்படும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987-ஆம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிறப்பு கருதுகோளை அடிப்படையாக கொண்டு இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டு புகையிலையானது இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருதுகோளின் அடிப்படையில் அனுசரிக்கப்படுகிறது.
உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது.

புகையிலையை எரிக்கும் போது வரும் புகையினால் பெருமளவில் பாதிப்பு ஏற்படுகிறது. எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் பிடிப்பதனால் கேன்சர் பாதிப்பு 90-92 சதவீதம் வரை குறைக்கப்படுவதுடன் புகையின் பாதிப்பு மிகவும் குறைவு ஆகும்.

மருத்துவர்களை கலந்தாலோசித்து சிகரெட்டிலிருந்து விடுபட முறையான சிகிச்சை முறைகளை மேற்கொண்டு தேவைக்கேற்ற மருந்துகளை எடுத்துக்கொண்டால் சிகரெட் எனும் அரக்கனிடமிருந்து எளிதாக விடுபட முடியும்.

World Health Organization

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்