மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் என்னும் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் உருவானது. இரு தரப்பிலும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : வாக்குப்பதிவு எந்திர மோசடியை அம்பலப்படுத்திய ஆம் ஆத்மி; அதிர்ச்சியில் பாஜக

புர்த்வான் மாவட்டம் ஆஷ்கிராமில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார், மூன்று பேர் காயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து பாஜகவினருக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் போக்கு உருவானது. திரிணாமுல் கட்சி உறுப்பினர்கள் பாஜக அலுவலகத்திற்குள் நுழைந்து, தாக்குதல் நடத்தியதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இரு தரப்பிலும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். மேலும் அங்கிருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். சமீப காலமாக பாஜகவினருக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

இதையும் படியுங்கள் : ‘பேச்சுவார்த்தைக்கு அழைத்தது ஒரு நாடகம்’

இதையும் படியுங்கள் : ராமனின் ஏதேன் தோட்டம்…. இதெல்லாம் மலையாளத்தில் மட்டுமே சாத்தியம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்