மேலும் மேலும் தொடரும் சோகம் : மீண்டும் விபத்தில் சிக்கி உயிரிழந்த புலம் பெயர்ந்த தொழிலாளிகள்

0
415

மகாராஷ்டிராவிலிருந்து மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு சென்றுகொண்டிருந்த ஒரு புலம் பெயர்ந்த தொழிலாளி அவரது மனைவி மற்றும் இரண்டு பேர் லாரி மோதி உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக, உத்தர பிரேதசமாநிலத்தில் உள்ள ஆரயா என்ற இடத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பயணித்துக் கொண்டிருந்த டிரக் ஒன்று, மற்றொரு டிரக்குடன் மோதி ஏற்பட்ட விபத்தில் 24 தொழிலாளர்கள்உயிரிழந்துள்ளனர். பலரும் காயமடைந்துள்ளனர்.

மேலும், மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாகர் மாவட்டத்தில் பான்டா எனும் பகுதியில் நடந்த சாலைவிபத்தில் 5 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அவர்கள் சென்று கொண்டிருந்தடிரக், தடம்புரண்டு விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டது.

கடந்த வாரம் மகாராஷ்டிராவில் 16 தொழிலாளர்கள் ரெயில் மோதி பலியானார்கள்.  கடந்த 13 ஆம் தேதி இரவில்,
மகாராஷ்டிராவில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்த உத்தர பிரதேச தொழிலாளர்கள் சிலர் லாரி ஒன்றில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தபொழுது, மத்திய பிரதேசத்தின் குணா என்ற பகுதியில் எதிரே வந்த பேருந்து ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது.  இந்த விபத்தில், தொழிலாளர்கள் 8 பேர் பலியாகினர்.  50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதேபோன்று அதே நாளில் நடந்த மற்றொரு துயர சம்பவத்தில், பஞ்சாபில் இருந்து பீகாரிலுள்ள சொந்த ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது, உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று மோதியது.  இதில், 6 பேர் பலியாகினர்.

பெரு நகரங்களிலிருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்றுகொண்டிருக்கும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தினமும் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சோகம் தொடர்ந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here