மேற்கு வங்கம்: 42,526 வாக்குகள் வித்தியாசத்தில் திரினாமுல் காங். வெற்றி; பாஜகவுக்கு 2வது இடம்

0
177

மேற்கு வங்க மாநிலம் காண்டி தக்சின் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான திரினாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த ஏப்.9ஆம் தேதி டெல்லி, மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 10 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை வியாழக்கிழமை (இன்று) நடைபெற்றது. இதில் கர்நாடகாவின் இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

அதே போன்று டெல்லி ரஜோரி கார்டன் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது. மேற்கு வங்க மாநில காண்டி தக்சின் தொகுதியில் திரினாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சந்திரிமா பட்டாச்சார்யா 95,369 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சவுரிந்திர மோகன் ஜனா 52,843 வாக்குகள் பெற்றார்.

இதையும் படியுங்கள் : காளிமாதா கோயிலில் அன்னை தெரஸா

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்