மேற்கு வங்க மாநிலத்தின் பாஜக தலைவர் வீட்டின் மீது திரினாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரோஸ் வேலி நிதி நிறுவன முறைகேடு தொடர்பான வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுதீப் பண்டோபாத்யாய், சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதே போன்று, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான தபஸ் பால் சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிபிஐ விசாரணைக் காவலில் உள்ளார்.

இதையும் படியுங்கள் : மேற்கு வங்கம்: திரிணாமுல் எம்பி கைது; பாஜக அலுவலகம் மீது தாக்குதல்

இந்நிலையில், உத்தர்பாரா பகுதியில் உள்ள அம்மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கிருஷ்ணா பட்டாச்சார்யாவின் வீடு மீது திரினாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக திரினாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர் பிரிவினர், கொல்கத்தாவில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தைத் தாக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டதையடுத்து, பாதுகாப்புக்காக துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர். இதற்கு அம்மாநில அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்