மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுதீப் பண்டோபாத்யாய், நிதி நிறுவன முறைகேடு தொடர்பான வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், பாஜக அலுவலகத்தைத் தாக்கினர்.

ரோஸ் வேலி நிதிநிறுவன மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக சுதீப் பண்டோபாத்யாயை, சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர். இதன் பின்னர், அவர் கைது செய்யப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள் : தீயிட்டு கொளுத்துவோம் என மிரட்டிய பாஜக எம்பி மீது போலீசார் வழக்குப் பதிவு

இதே போன்று, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான தபஸ் பால் சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிபிஐ விசாரணைக் காவலில் உள்ளார். இந்நிலையில் சுதீப் பண்டோபாத்யாய் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அக்கட்சியின் இளைஞர் பிரிவினர், கொல்கத்தாவில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தைத் தாக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டதையடுத்து, பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்