உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க, மேற்கு வங்க அரசு அனுமதிஅளிக்க மறுத்துவிட்டது. கொல்கத்தாவில் இருந்து 400கி.மீ தொலைவில் உள்ள மேற்கு வங்க மாநிலம் பலூர்காத் இன்று நடைபெற இருந்த பாஜக தேர்தல் பொதுக்கூட்டம் மற்றும் பேரணியில் யோகி ஆதித்யநாத் பங்கேற்க இருந்தார்.
இந்நிலையில், முன் அறிவிப்பின்றி யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக யோகி ஆதித்யநாத் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, யோகி ஆதித்யநாத் தகவல் ஆலோசகர் மிருதுன்ஜெய் குமார் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, புகழ்பெற்ற உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டருக்கே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது..

இதோடு இரண்டாவது முறையாக பாஜக தலைவர்களின் ஹெலிகாப்டர் தரையிறங்க மேற்குவங்கத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த மாதத்தில் அமித்ஷாவுக்கு இதேபோல் அனுமதி மறுக்கப்பட்டது.

மேற்கு வங்கத்தில் பாஜக பேரணி இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அழைக்கப்பட்டு இருந்தார். பலூர்காத் பகுதியில் அவருடைய ஹெலிகாப்டரை தரையிறக்கி அங்கிருந்த பேரணி இடத்துக்கு வருவதாகத் திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால், எந்தவிதமான முன்அறிவிப்பும் இன்றி திடீரென உ.பி. முதல்வரின் ஹெலிகாப்டர் தரையிறங்க மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்துவிட்டது. இதனால், பேரணியில் பங்கேற்க உ.பி. முதல்வர் வருகை ரத்து செய்யப்பட்டது என பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர் . இதையடுத்து, காணொலிக் காட்சி மூலம் ஆதித்யநாத் பேரணியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

“மேற்கு வங்கத்தின் திரணமூல் அரசு அங்கு வருவதற்கு என்னை அனுமதிக்கவில்லை. அதனால் தான் நான் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் தற்போது உங்களுடன் இணைந்திருக்கிறேன். மேற்கு வங்க அரசு தேசிய பாதுகாப்புடன் விளையாடுகிறது. இது ஜனநாயகத்தன்மையில்லாத ஒழுக்கமற்ற மக்கள் விரோத அரசு. பாஜகவின் வளர்ச்சி மேற்கு வங்க அரசுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயக நாட்டில் மாறுபட்ட கருத்துகள் இருக்கும். ஆனால், மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்படும். தேர்தலில் எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதை பார்த்துள்ளோம். மம்தா பானர்ஜிக்கும் அவரது கட்சிக்கும் ஜனநாயகம் மீதும், இந்திய அரசமைப்பின் மீதும் நம்பிக்கையில்லை என்பதை இதுபோன்ற நிகழ்வுகள் உறுதிபடுத்துகின்றன.

மேற்கு வங்க மாநிலத்தில் நவராத்திரி சமயத்தில் நடைபெறும் துர்கா பூஜையை தடுப்பதற்கான நடவடிக்கையும் இந்த அரசு மேற்கொண்டது. இறுதியில் கொல்கத்தா நீதிமன்றம் தலையிடவேண்டியதாயிற்று.
திரிணமூல் கட்சியைச் சேர்ந்த குண்டர்களுக்கு எதிராக பாஜக சண்டையிடவேண்டும். மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது என்பதை மக்களுக்கு உறுதியளிக்க வேண்டும். அதன்மூலம், பாஜக ஆட்சிக்கு வரும்.

பட்ஜெட்டில் விவசாய திட்டம் மூலம் 12 கோடி விவசாயிகள் பயனடைவார்கள். 10 கோடிக்கும் மேலான தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 ஓய்வூதியம் கிடைக்கும். 4 கோடி சிறுதொழில்களுக்கு இந்த பட்ஜெட் பாதுகாப்பு உத்தரவாதத்தை அளித்துள்ளது. மேலும், நடுத்தர வர்க்க மக்கள் மற்றும் ஊதியம் பெற்று வாழும் மக்களுக்கு இந்த பட்ஜெட் நல்ல எதிர்காலத்துக்கான நம்பிக்கையை அளித்துள்ளது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here