பாதுகாப்பு வழிமுறைகளுடன் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் மேற்கு வங்க மாநிலத்தில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 50 பார்வையாளர்கள் அல்லது அதற்கும் குறைவானவர்கள் பார்க்கும் வகையில் சினிமாதிரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. திறந்தவெளி தியேட்டர்களையும் திறந்து கொள்ளலாம். இதேபோல இசை மற்றும் நடன குழுக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சமூக இடை வெளியை மக்கள் கடைபிடிக்க வேண்டும். கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும். இதில் எந்தவித மாற்றமும் கிடையாது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடும். என அதில் கூறப்பட்டுள்ளது.
சினிமா திரையரங்குகள் மட்டுமல்லாமல் ஜட்ராஸ், நாடகங்கள், ஓஏடிகள், மற்றும் அனைத்து இசை, நடனம் மற்றும் மேஜிக் நிகழ்ச்சிகள் 50 பங்கேற்பாளர்களுடன் அல்லது அதற்கு குறைவானவர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் மாதத்தில் நாடு தழுவிய பொதுமுடக்கம் தொடங்கியதிலிருந்து திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.