ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்கள் செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஐபோன் 11 மாடலில் 5 வாட் சார்ஜருக்கு மாற்றாக யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜர் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், 2019 ஐபோன் சீரிஸில் ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் என மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

யு.எஸ்.பி. டைப்-சிசார்ஜர் ஐபோன் XS மற்றும் ஐபோன் XR மாடல்களுடன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யு.எஸ்.பி. டைப்-ஏ போர்ட்வழங்கப்பட்டது. ஆனால், ஐபோன் 11 யு.எஸ்.பி. டைப்-சிசார்ஜருடன் வரும் எனதகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை வெளியான ஐபோன் மாடல்களில் ஆப்பிள் வழக்கமான சார்ஜர்களையே வழங்கி வருகிறது. புதிய ஐபோன் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்டில் இருந்து லைட்னிங் கேபிள் இணைப்பு வழங்கப்படலாம்.

சமீபத்தில் வந்த ஐபேட் ப்ரோ மாடல்கள்யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜர் மற்றும் ஃ பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வழங்கப்பட்டது. முன்னதாக மார்ச் மாதத்தில் வெளியான தகவல்களிலும் 2019 ஐபோன்களுடன் யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜர் வழங்கப்படலாம் என கூறப்பட்டிருந்தது.

புதிய சார்ஜர் தவிர ஐபோன் 11 மாடலில் மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்படலாம். புதிய மாடலில் சதுரங்கவடிவம் கொண்ட கேமரா பம்ப் மற்றும் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள்ஆப்பிளின் ஏ13 சிப்செட், புதிய டேப்டிக் என்ஜின் ஆகியவையும் வழங்கப்படலாம்.