DiirG6EVMAA8Y7y

கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா நவி ஸ்கூட்டரை ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கிறது.

தற்போதைய மாடலை விட புதிய வெர்ஷன் பிரீமியம் மாடலாக உருவாகியுள்ளது.

இந்தியாவில் 2016-ம் ஆண்டில் ஹோன்டா நவி ஸ்கூட்டர் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. நவி ஸ்கூட்டர் முழுமையாக ஹோன்டா இந்தியா ஆய்வு மற்றும் வளர்ச்சி குழுமத்தால் வடிவமைக்கப்பட்டதாகும்.

இந்தியா தவிர ஹோன்டா நவி ஸ்கூட்டர் லத்தின் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

புதிய 2018 ஹோன்டா நவி மாடலில் புதிய ஃபியூயல் காஜ், மெட்டல் மஃப்ளர் ப்ரோடெக்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் கிராப் ரெயில், ஹெட்லைட் கவர்கள் மற்றும் ரியர்வியூ கண்ணாடிகள், ஸ்போர்ட் ரெட் நிறம் கொண்ட குஷன் ஸ்ப்ரிங் வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களும் வழங்கப்படுகிறது. 2018 ஹோன்டா நவி ஸ்கூட்டரில் 109சிசி, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே இன்ஜின் ஹோன்டா ஆக்டிவா மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8 பி.ஹெச்.பி. பவர், 9 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது.

இத்துடன் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. ஹோன்டா நவி மாடலின் முன்பக்கம் மற்றும் பின்புறம் முறையே 12 இன்ச் மற்றும் 10 இன்ச் டியூப்லெஸ் டையர்கள் வழங்கப்பட்டுள்ளன.

DiirHmHU0AA-T7s

இந்தியாவில் ஹோன்டா நவி 2018 மாடல் ரேன்ஜ் கிரீன் மற்றும் லடாக் பிரவுன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

2018ஆம் ஆண்டில் வெளிவந்திருக்கும் ஹோன்டா நவி ஸ்கூட்டர் விலை ரூ.44,775 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தற்சமயம் விற்பனையாகும் மாடலை விட ரூ.1,991 வரை விலை அதிகம் ஆகும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்