மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மேற்கு கால்வாய்களில் பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பது மேலும் ஒருவாரக் காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு,மேற்கு கால்வாய்களில் ஆண்டுதோறும் ஆகஸ்டு முதல் நாளில் இருந்து டிசம்பர் 15வரை 135நாட்கள் தண்ணீர் திறக்கப்படும். அதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

முன்கூட்டியே அணை நிரம்பியதால் ஜூலை 23முதல் கிழக்கு மேற்கு கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டது. டிசம்பர் 15ஆம் நாள் தண்ணீர் நிறுத்தப்பட வேண்டிய நிலையில் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டது.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 7 வரை கால்வாய்களில் தண்ணீர் விட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் கிழக்கு மேற்கு கால்வாய்களுக்கு வழக்கமாக 135 நாட்கள் நீர் திறக்கப்படும் நிலையில் இந்த முறை 167நாட்கள் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 85 அடியாக இருந்தது. நீர்வரத்து நொடிக்கு 293கனஅடியாக உள்ளது. பாசனத்துக்காக ஆற்றில் நொடிக்கு எட்டாயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here