மேகாலயாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் கடந்த 3 வாரங்களாக சிக்கியுள்ள 15 பேரைக் காப்பாற்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் முழு வீச்சில் போராடி வருகின்றனர். இதுவரை மீட்புப் பணியில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில், மீட்புப் பணி குறித்து அடுத்தடுத்து வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி, மேகாலயாவின் சாய்பங், ஈஸ்ட் ஜையின்சியா ஹில்ஸ் என்ற இடத்தில் சட்ட விரோதமாக இயங்கி வந்த நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்தோர் சுவரில் வேலை பார்த்த போது இடிந்து விழுந்தது. இதையடுத்து, அருகிலிருந்து லிட்டியன் நதியிலிருந்து சுரங்கத்திற்குள் நீர் புகுந்தது. இதனால், சுரங்கத்திற்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்த 15 பேர், உள்ளேயே மாட்டிக் கொண்டனர். உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்க, அரசு சார்பில் கடந்த 15 நாட்களாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், அதில் இதுவரை எந்தவித வெற்றியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாய்லாந்தின் குகைக்குள் 12 சிறுவர்கள் சிக்கியிருந்தபோது, அவர்களை மீட்க கிர்லோஸ்கர் நிறுவனம், உயர் அழுத்த பம்புகளை கொடுத்து உதவியது. அதேபோன்ற உதவியை தற்போது மேகலாயா மீட்புப் பணிக்கும் கொடுத்து உதவ அந்த நிறுவனம் முன் வந்துள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இச்சம்பவம் குறித்து கூறுகையில், ‘எங்கள் மீட்புப் படையினர், சுரங்கத்திற்குள் இருந்த நாற்றம் அடித்தபதாக தெரிவித்துள்ளனர். அது சுரங்கத்திற்குள் தேங்கியுள்ள நீரினில் இருந்து வரும் நாற்றமா அல்லது வேறு நாற்றமா என்பதில் தெளிவில்லை. நாங்கள் மீட்புப் பணியை துரிதமாக்கியுள்ளோம்’ என்று தகவல் தெரிவித்துள்ளனர் .

2014 ஆம் ஆண்டு முதல் மேகாலயாவில் நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரி எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி சிறிய குகைகளை (எலி பொந்துக்கள் போன்று) உருவாக்கி அதன் வழியாக நிலக்கரியை எடுத்து வந்துள்ளனர். இந்த குகைகளுக்குள் ஆட்கள் நுழைந்து வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த பொந்துகள் 3 முதல் 4 அடி உயரமே இருக்கும் , ஒரு நபரால் நிமிர்ந்து நிற்க கூட முடியாது இந்த பொந்துகளுக்குள்.

Courtesy : NDTV

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here