மேகாலயா மாநிலத்தில் அமலில் இருந்த ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (Armed Forces Special Powers Act – AFSPA) திரும்பப் பெறப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர், அஸ்ஸாம், மேகாலயா, மணிப்பூர் (இம்பால் தொகுதியைத் தவிர்த்து), நாகலாந்து, அருணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் உள்ளது. இச்சட்டத்தின்படி, சந்தேகத்துக்குரிய பகுதிகளில் முன் அனுமதியின்றி சோதனை நடத்தவும், தற்காப்புக்காக சுட்டுக்கொல்லவும் ராணுவத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ், கடந்த 2000ஆம் ஆண்டு அசாம் ரைஃபிள்ஸ் படையினர், இம்பால் அருகே உள்ள மாலோம் கிராமத்தில் சந்தேகத்தின்பேரில் 10 அப்பாவிகளைச் சுட்டுக் கொன்றனர்.

இதனையடுத்து ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி தொடர்ந்து பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி மணிப்பூரைச் சேர்ந்த இரோம் ஷர்மிளா கடந்த 16 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தார். மேலும் இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது.

இந்நிலையில் மேகாலயா மாநிலத்தில் அமலில் இருந்த ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம், கடந்த மார்ச் 31ஆம் தேதியோடு திரும்பப் பெறப்பட்டு விட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் எட்டு காவல் நிலைய எல்லைகளுக்குளள்ளும் இந்தச் சட்டம் திரும்பப்பெறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: உங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்